ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018 ஆபர்: ரூ.199/- மற்றும் ரூ.299/- அறிமுகம்.!
"ஹேப்பி நியூ இயர் 2018" தொகுப்பின் கீழ் ரூ.199/- மற்றும் ரூ.299/- என்ற இரண்டு புதிய கட்டண திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டுமொரு கட்டண யுத்தத்தை தொடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் புதிய போட்டி திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், தற்போது அதன் புதிய கட்டண திட்டங்களை "ஹேப்பி நியூ இயர் 2018" என்ற பெயரின் கீழ் அறிவித்துள்ளது.

இந்த "ஹேப்பி நியூ இயர் 2018" தொகுப்பின் கீழ் ரூ.199/- மற்றும் ரூ.299/- என்ற இரண்டு புதிய கட்டண திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. இதுநாள் வரை ஜியோவிற்கு எதிராக கட்டண திட்டங்களை தொகுத்து வழங்கிவந்த பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இனி செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

சிறந்த நன்மை
அறிமுகமாகியுள்ள இரண்டு புதிய ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களில் ஒன்றான ரூ.199/- ஆனது, இதர தொலைத் தொடர்புத் திட்டங்களை போலவே இருந்தாலும், வழக்கம் போல மற்றவர்களை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

1.2 ஜிபி
ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நாள் ஒன்றிற்கு 1.2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது உடன் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் சேர்த்தே வழங்குகிறது.

2 ஜிபி
மறுகையில் உள்ள ரூ.299/- திட்டமானது, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் ரூ.199/- போலவே இந்த திட்டமும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

128 கேபிபிஎஸ் இணைய வேகம்
மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சற்றே கூடுதலான தரவை வழங்குவதைத் தவிர்த்து, ரிபையன்ஸ் ஜியோவின் இந்த திட்டங்கலின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 128 கேபிபிஎஸ் இணைய வேகம் திகழ்கிறது.

ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
இந்த இரண்டு புதிய கட்டண திட்டங்களை தவிர்த்து, ஏற்கனவே கிடைக்கும் மற்ற ஜியோ கட்டண திட்டங்களில் எந்த விதமான மாற்றமும் திருத்தமும் அறிவிக்கப்படவில்லை. ரிலையன்ஸ் ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த இரண்டு புதிய திட்டங்கள் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்தி ஏர்டெல்
இந்த திட்டங்களை ஜியோ அறிவிப்பதற்கு முன்னதாகவே பார்தி ஏர்டெல் நிறுவனம், ரூ.199/- என்கிற அதன் கட்டணத் திட்டத்தில் பிராதன திருத்தத்தை நிகழ்த்தியது. இனி ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் (ரோமிங் உட்பட), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் அடங்கும்.

70 நாட்களுக்கு
ஜியோ நிறுவனமானது ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.509 ஆகிய கட்டண திட்டங்களின் வழியாக ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 70 நாட்களுக்கும் மற்றும் அதே நன்மைகளை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் அதன் ரூ.459/- திட்டத்தையும் வழங்கி வருகிறது.

91 நாட்களுக்கு
மேலும் நீண்ட கால மற்றும் அதிக டேட்டா வழங்கும் நோக்கத்துடன் மேற்குறிப்பிட்ட அதே நன்மைகளுடன் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் அதன் ரூ.499/- திட்டத்தையும் இறுதியாக 49 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.509/- திட்டத்தையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications