சமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்

|

இந்திய விமானப்படை மருத்துவக் கழக 58 ஆம் ஆண்டு கூட்டம் பெங்களூருவில் மூன்று நாள் நடக்கிறது. இதில் விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த கூட்டமானது ஏரோஸ்பேஸ் ஹெல்த்கேரை முன்னுதாரணமாக மாற்றுதல் என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் கலந்து கொண்ட ஆர்.கே.எஸ்.பதோரியா விழா மேடையில் உரையாற்றினார்.

காலப்போக்கில் மறந்து போன மருத்துவ ஆலோசனை...

காலப்போக்கில் மறந்து போன மருத்துவ ஆலோசனை...

சில ஆண்டுகளுக்கு முன்பு விமானப்படையில் பணிபுரியும் விமானிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் சிறிது சிறிதாக குறைந்து தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மொத்தம் 300 புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் விமானப்படை மருத்துவக் கழகத்தினரில் புகழ் பெற்ற செயல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட இருக்கின்றன.

விழாவில் பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா

விழாவில் பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா

இந்த மாநாட்டை தொடங்கி வைத்தப் பின் பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதோரியா, இந்திய விமானப்படையில் விமானப்படை மருத்துவக் கழகத்தின் சேவையை முழுவதுமாக பெறாமல் இருக்கிறோம் எனக் கூறிய அவர், இந்திய விமானப்படையினர் காயமடையும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் விமானப்படை மருத்துவக் கழகத்தின் பங்கு அளப்பறியது என புகழ்ந்தார்.

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மருத்துவ ஆலோசனை மீண்டும் துவங்க திட்டம்...

மருத்துவ ஆலோசனை மீண்டும் துவங்க திட்டம்...

விமானிகளாக உள்ள இளைஞர்களுக்கு முன்பு அளித்ததை போல மருத்துவ ஆலோசனை மீண்டும் தேவை என்று கூறிய பதோரியா, மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தை முன்பு போல் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

சமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்...

சமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்...

இந்த காலக்கட்டத்தில் இளம் விமான ஓட்டிகள் சமூகவலைதளங்களால் கவரப்பட்டு, அதற்கு அடிமையைப்போல் இருக்கிறார்கள் எனவும் அதிகப்படியான நேரங்களை சமூகவலைதளங்களில் செலவிடுவதால் அவர்களுக்கு தூக்கம் கெட்டப்போகிறது எனவும் தற்போதைய நிலையில் விமானிகளின் பயணம் நெடுந்தொலை கொண்டதாக இருக்கு எனவும் ஒரேமுறை பல்வேறு பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கு எனவும் கூறினார்.

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விமானிகள் தூங்காமல் இருப்பது ஆபத்தான விஷயம்.,

விமானிகள் தூங்காமல் இருப்பது ஆபத்தான விஷயம்.,

விமானிகள் தூக்கம் இல்லாமல் இருப்பது மிக அபாயமான விஷயம் எனவும் அவர்களுக்கு சரியான மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் கூறினார். அதேபோல் மருத்துவ ஆலோசனை மூலம் சமூகவலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் கூறினார்.

More News:சந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.!

source: @IAF_MCC

Best Mobiles in India

Read more about:
English summary
We have to find ways of discouraging young pilots to stay away from this later at night. We have to find ways to recognise who hasn’t had much sleep says iaf chief.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X