சந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.!

|

சந்திரயான் 2 மிஷன் வாயிலாக சந்திரனில் தரையிறங்கும் இந்தியாவின் முதல் முயற்சியின் ஒரு பகுதியான விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தரையிறங்கும் போதி நிலவின் மேற்பரப்பில் மோதி செயலிழந்ந பிறகு தொடர்புகொள்ள இயலாத நிலைக்கு சென்றுவிட்டது.

சந்திரயான் 2

சந்திரயான் 2

ஆனாலும் சற்றும் மனம்தளராத இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினான இஸ்ரோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எதிர்காலத்தில் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை தயாரித்து வைத்திருந்த நிலையில் தற்போது அதை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றிவருகிறது.

சந்திரயான் 2 மிஷன் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் ஆகிய பெரிய பட்ஜெட் மிஷன்கள் மட்டுமே பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவை. ஆனால் அவைமட்டுமின்றி, இந்நிறுவனம் வரவிருக்கும் தசாப்தத்திற்காக மொத்தம் ஏழு விண்வெளி மிஷன்களில் பணியாற்றிவருகிறது . செவ்வாய், சந்திரன், வெள்ளி, சூரியனின் கொரோனா மற்றும் விண்வெளி ஆய்வு செய்ய கிரக விண்வெளிகளும் இவற்றில் அடக்கம்.

1) ஆதித்யா - எல்1 மிஷன் (ஏப்ரல் 2020)

1) ஆதித்யா - எல்1 மிஷன் (ஏப்ரல் 2020)

ஆதித்யா-எல் 1 மிஷன் சூரியனின் கொரோனாவையும் அதன் வளிமண்டலத்தையும் ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமிட்ட ஆய்வு ஆகும். கொரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு ஆகும். இது சூரியனைச் சுற்றியுள்ள புலப்படும் வட்டுக்கு மேலே ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் விரிவடைந்திருக்கும்.

சுவாரஸ்யமாக இது சூரியனின் மேற்பரப்பை விட மிக அதிகமாக (6000 டிகிரி கெல்வின்) மில்லியன் டிகிரி கெல்வின் வெப்பநிலையைக் கொண்டுள்ளது. கொரோனா எவ்வாறு இவ்வளவு அதிக வெப்பநிலைக்கு வெப்பமடைகிறது என்பது சூரிய இயற்பியலில் இன்னும் பதிலளிக்கப்படாத கேள்வியாகும். இதைத்தான் நாசாவின் பார்க்கர் தற்போது ஆராய்ந்து வருகிறது.


இஸ்ரோவின் ஆதித்யா எல் -1 விரைவில் இதை பின்பற்றி இந்த வானியற்பியல் மர்மத்தை ஆராயவுள்ளது. இந்த விண்கலம் 2020 ஏப்ரலில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏவப்படும் என்று இஸ்ரோவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு! காரணம் இதுதான்!75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு! காரணம் இதுதான்!

2) ககன்யான் (டிசம்பர் 2021/ஜனவரி 2022)

2) ககன்யான் (டிசம்பர் 2021/ஜனவரி 2022)

பிரதமர் நரேந்திர மோடி தனது 2018ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், 2022 க்குள் 'ககன்யான்' என்ற விண்கலத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா முயற்சிக்கும் என்று அறிவித்தார்.

இம்முயற்சி வெற்றியடைந்தால் இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறும் என்றார். 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ககன்யான் இந்தியாவின் மிகப்பெரிய, தைரியமான விண்வெளி பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் இருப்பதற்கான ககன்யானின் குழு தொகுதி, விண்வெளியில் அவர்களை உயிரோடு வைத்திருக்க தேவையான அமைப்புகள் மற்றும் விண்கலத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை பரிசோதிக்க மனித விண்வெளிப் பயணங்களுக்கான புதிய சோதனைதளம் இஸ்ரோவால் நிறுவப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டில் இஸ்ரோவுக்கு இந்த மிஷன் "அதிக முன்னுரிமை" வாய்ந்தது என்று விண்வெளி நிறுவனம் அறிவித்ததுள்ளது. இந்த பயணத்திற்கான முதல் ஆளில்லா சோதனைகளை 2020 டிசம்பரிலும், இரண்டாவது ஜூலை 2021 இல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், மனிதர்களுடன் ககன்யானின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி டிசம்பர் 2021ல் நடைபெறும்.

3) மங்கள்யான் 2 (2022 - 2023)

3) மங்கள்யான் 2 (2022 - 2023)

செவ்வாய் கிரகத்திற்கான இந்தியாவின் இரண்டாவது மிஷனான மார்ஸ் ஆர்பிட்டர் -2, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) 2022 மற்றும் 2023 க்கு இடையில் திட்டமிடப்பட்ட மற்றொரு பணி ஆகும். மங்கல்யான் -2 ஆர்பிட்டர் ஏரோபிரேக்கிங்கைப் பயன்படுத்தி அதன் ஆரம்ப அபோப்சிஸைக் குறைத்து ஆய்வுகளுக்கு மிகவும் பொருத்தமான சுற்றுப்பாதையில் நுழையும். மங்கல்யான் -1 மிஷனைப் போலவே இந்த மிஷனும் தனித்த ஆர்பிட்டர் திட்டமாக திட்டமிடப்பட்டுள்ளதால், இதில் லேண்டர் அல்லது ரோவர் இடம்பெறாது.


இந்தியா மற்றும் பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

4) சந்திரயான் 3 மிஷன் ( 2020 இறுதியில்)

4) சந்திரயான் 3 மிஷன் ( 2020 இறுதியில்)

சந்திரயான் (இந்தியாவின் நிலவு ஆய்வு) திட்டத்தின் இரண்டாவது மிஷன் தற்போது நடந்து கொண்டிருக்கையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் இந்த ஆண்டு ஜனவரியில் இந்த தொடரின் மூன்றாவது மிஷன் வரும் தசாப்தத்தில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். சந்திரயான் திட்டம் எப்போதும் ஒரு மல்டி மிஷன் விண்வெளி திட்டமாக கருதப்படுகிறது.

சந்திரனில் ஒரு இந்திய ரோபோ செயல்படும் சாத்தியத்தை அறிய இஸ்ரோ விரைவில் ஒரு ஸ்பேஸ் ரோபாட்டிக்ஸ் திட்டத்தை தொடங்கவுள்ளது என இஸ்ரோ கூறியுள்ள நிலையில், முதல் மிஷனில் ஆர்பிட்டர், இரண்டாவது மிஷனில் ஃசாப்ட் லேண்டர் மற்றும் ரோவர் போல மூன்றாவது மிஷனில் என்ன புதுமை என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

5) வெள்ளி கிரகத்திற்கு சுக்ரயான் மிஷன் (2023-2025)

5) வெள்ளி கிரகத்திற்கு சுக்ரயான் மிஷன் (2023-2025)

நமது பூமியுடன் பல்வேறு அம்சங்களில் ஒத்துப்போகும் அண்டை கிரகமான வெள்ளி, பூமியைக்காட்டிலும் 30%சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால், சூரிய கதிர்கள் உள்ளிட்ட பல விசயங்கள் அதிகம் இருப்பதால் இஸ்ரோ ஆய்வு செய்ய விரும்புகிறது.

கார்பன் டை ஆக்சைடால் ஆன வெள்ளியின் வளிமண்டலத்தைப் ஆய்வுசெய்ய ஒரு ஆர்பிட்டரை அனுப்ப இஸ்ரோ விரும்புகிறது. சுக்ரயன் மிஷன் மூலம் அதன் அடர்த்தி, வெப்பமான சூழ்நிலை மற்றும் கிரகத்தின் மேற்பரப்பையும் ஆய்வு செய்யவுள்ளது.

6)எக்ஸ்போசாட் கிரக ஆய்வு (2020)

6)எக்ஸ்போசாட் கிரக ஆய்வு (2020)

பிரபஞ்சத்தின் எக்ஸ்ரே மூலங்களைப் ஆய்வுசெய்யும் இஸ்ரோவின் பல-அலைநீள எக்ஸ்-ரே வானியல் ஆய்வகமான ஆஸ்ட்ரோசாட் மிஷனைப் பின்தொடர்ந்து எக்ஸ்போசாட் மிஷன் திட்டமிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. ஆஸ்ட்ரோசாட்டின் மிகப்பெரிய வெற்றியைக் கருத்தில் கொண்டு, எக்ஸ்போசாட் மிஷன் பிரபஞ்சத்தில் எக்ஸ்-கதிர்களை ஆராயும். அதிலும் குறிப்பாக நமது பிரபஞ்சத்தில் பிரகாசமான எக்ஸ்ரே மூலங்களின் துருவப்படுத்தலை ஆராயும்.

7) இந்தியாவின் விண்வெளி நிலையம் (2023)

7) இந்தியாவின் விண்வெளி நிலையம் (2023)

இஸ்ரோவின் பட்டியலில் உள்ள மற்றொரு திட்டம் இந்தியா நிறுவவுள்ள விண்வெளி நிலையம். தற்போது ​​சர்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில் , அதுவும் 2028 க்குள் மூடப்படவுள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் 15-20 டன் எடையுள்ளதாகவும், 15-20 நாட்களுக்கு விண்வெளி வீரர்கள் தங்கும் வகையிலும் இருக்கும். மைக்ரோ கிராவிட்டி சோதனைகளை நடத்த இது பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.


சிவனின் கூற்றுப்படி இந்த விண்வெளி நிலையம், 2022 ஆம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 10,000 கோடி மதிப்புள்ள ககன்யான் பயணத்தின் தர்க்கரீதியான நீட்டிப்பாகும்.

Best Mobiles in India

English summary
ISRO's Upcoming Mission Projects to Mars, Venus, Sun Details in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X