ஏர்டெல் : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

|

ஏர்டெல் அதன் புதிய சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது அதன்படி 4ஜி சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களுக்கான (ரூ 9,000 மதிப்புள்ள) 4ஜி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த 12 மாதங்களுக்கான இலவச 4ஜி டேட்டா திட்டத்தை எந்தவொரு 4ஜி மொபைல் பயனாளியும், ஏற்கனவே ஏர்டெல் சேவையை (ப்ரீபெய்ட், போஸ்ட்பெயிட்) பெறும் மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்கில் தற்போது இல்லாத வாடிக்கையாளரும் கூட பெறலாம்.

ஏர்டெல் : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

ஏர்டெல் வழங்கும் இந்த சிறப்பு சலுகையை பெறுவது எப்படி..? இந்த திட்டம் எப்போது வரை கிடைக்கப்பெறும்.? மாதந்தோறும் எந்த அளவிலான டேட்டா கிடைக்கும் போன்ற முழுமையான தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பே இது.!

ஜனவரி முதல் பிப்ரவரி வரை

ஜனவரி முதல் பிப்ரவரி வரை

ஏர்டெல் வழங்கும் இந்த சலுகையானது ஜனவரி 4-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மற்றும் 2017, பிப்ரவரி 28-ஆம்தேதியுடன் மூடப்படும்.

3ஜிபி / மாதம்

3ஜிபி / மாதம்

இந்த வாய்ப்பின் கீழ், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச 3ஜிபி தரவு ஒவ்வொரு மாதமும் அதாவது 2017, டிசம்பர் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு

ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1ஜிபி வழங்கும் ரூ.345/- பேக்கின் (பேக் விலை வெவ்வேறு வட்டாரங்களில் மாறுபடலாம்) திட்டத்தில் மேலும் 3ஜிபி அளவிலான இலவச டேட்டா சேர்க்கப்பட்டு மாதம் மொத்தம் 4ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும். இந்த ரூ.354/- தொகுப்பானது இலவச அழைப்புகளையும் (உள்ளூர் + எஸ்.டி.டி.) வழங்கும்.

2017, 31 டிசம்பர் வரை

2017, 31 டிசம்பர் வரை

முதல் முறை பெறும் இலவச 3ஜிபி தரவு நன்மையை மைஏர்டெல் ஆப் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் பிற தரவு திட்ட நன்மைகளை உடனடியாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேக் நன்மைகள் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருக்கும் மற்றும் 2017, 31 டிசம்பர் வரை 13 முறை அதிகபட்சமாக இந்த சலுகையை பெறலாம்.

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு

ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள், மை இன்பினிட்டி திட்டத்தின் கீழ்வரும் அனைத்து திட்டங்களிலும் இலவச 3ஜிபி தரவை மாதந்தோறும் பெறலாம்.

கூடுதலாக 3ஜிபி டேட்டா

கூடுதலாக 3ஜிபி டேட்டா

வழக்கமான மை இன்பினிட்டி திட்டத்தின் நன்மைகளான இலவச குரல் அழைப்பு (உள்ளூர் + எஸ்டிடி), இலவச எஸ்எம்எஸ் மற்றும் வின்க் ம்யூஸிக் மற்றும் வின்க் மூவீஸ் சந்தாக்களுடன் சேர்த்து கூடுதலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படும். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் மைஏர்டெல் ஆப் மூலம் கூடுதல் தரவு கோர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3ஜிபி

3ஜிபி

உதாரணமாக, ஒரு மாத காலம் செலுப்படியாகும் ரூ.549/- இன்பினிட்டி திட்டத்தில் இப்போது வரம்பற்ற இலவச அழைப்புகளுடன் 6 ஜிபி தரவை (வழக்கமான 3ஜிபி + 3ஜிபி இலவச தரவு) வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஆண்டு முழுவதும்

ஆண்டு முழுவதும்

"இந்தியாவின் மிக வேகமாக நெட்வொர்க்கின் 4ஜி டேட்டவை ஆண்டு முழுவதும் அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்தில் இந்த சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4ஜி கைபேசிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த கவர்ச்சிகரமான சலுகை ஏர்டெல் வழங்கும் அதிவேக அகன்ற அலைவரிசையை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன் " என்று அஜய் பூரி - இயக்குநர், மார்க்கெட் ஆப்ரேஷன், பார்தி ஏர்டெல் - தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி.!? (எளிய வழிமுறைகள்)

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel offers free 4G data for a year to those who switch: Here’s how. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X