ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் இவங்க தான்

By Staff
|

ஆப்பிள் நிறுவனம் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அதன் கருவிகள் அனைத்தும் உலக புகழ் பெற்றிருக்கின்றது. மற்ற பிரான்ட் கருவிகள் வெளியானதும் அதை பற்றிய செய்திகள் தெரிய வரும், ஆனால் ஆப்பிள் பொருட்களை பொருத்த வரை வெளியாவதற்கு முன்பே அதை பற்றி நிறைய வதந்திகள் வெளியாவதுண்டு.

ஃபேஸ்புக்கில் பகிரக்கூடாத விஷயம் என்னென்ன?

ஆப்பிள் பற்றிய பல செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள், அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறுபவர்கள் யார் யார் என்று இங்க பாருங்க

1

1

ஆப்பிள் நிறுவனத்தில் தொழில்துறை வடிவமைப்பாளரின் சமப்ளம் $174,140, இந்நிறுவன பொருட்களின் வடிவமைப்பு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடவே முடியாது என்று தான் கூற வேண்டும்

2

2

வன்பொருள் பொறியாளருக்கு $150,105 சம்பளம் கொடுக்கப்படுகின்றது. கொஞ்சகாலம் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்தால் மூத்த பொறியாளராக பணி உயர்வு கிடைக்கும் அதன் பின் தான் அதிக சம்பளம் வழங்கப்படும்

3

3

மூத்த வன்பொருள் பொறியாளரை மூத்த மென்பொறுள் பொறியாளருக்கு சம்பளம் சற்று குறைவு தான், இவர்களுக்கு $140,832 சம்பளமாக வழங்கப்படுகின்றது.

4

4

ஒவ்வொரு கருவியும் தயாரானவுடன் அதை ஏற்றுமதி செய்வது தயாரிப்பு மேலாளரின் பணி, இவர்கள் கருவி தயாராகும் அனைத்து பிரிவுகளையும் கண்கானித்து சிறந்த கருவியை ஏற்றுமதி செய்வர். இவர்களின் சம்பளம் $131,108

5

5

ஆப்பிள் பொருட்களின் இயந்திரங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும், ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் பணியை மேற்கொள்வது இயந்திர பொறியாளர்கள், இவர்களின் ஊதியம் $127,464

6

6

$125,983 சம்பளம் பெறும் வடிவமைப்பாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களின் சம்பளம் மென்பொருள் பொறியாளரை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது

7

7

டேட்டாபேஸ் நிர்வாகிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சரியாக வேலை செய்யவும் டேட்டாபேஸ் ஆப்லைன் போகாமல் இருக்கவும் பார்த்துகொள்வர், இவ்ரகளின் சம்பளம் $122,669

8

8

ஆப்பிள் அப்ளிகேஷன் மற்றும் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மூளதனமாக செயல்படுவது மென்பொருள் பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $119,336 ஊதியம் அளிக்கப்படுகின்றது

9

9

ஆப்பிள் வன்பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது 9வன்பொருள் பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $118,739 சம்பளமாக அளிக்கப்படுகின்றது

10

10

மூத்த அதிகாரிகளில் குறைந்த சம்பளம் பெருபவர்கள் மூத்த கணினி பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $117,237 சம்பளம் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Highest paying jobs at Apple. Here you will find the list of some top-paid jobs at Apple.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X