தமிழக மீனவர்களுக்கு உதவும் GPS சாதனங்கள்...பயனுள்ளதா?

|

தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் தாக்கபடுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், ஏன் சில சமையங்களில் கொல்லப்படுகிறார்கள். இந்த அவலநிலைக்கு அரசும் ஒரு காரணமென பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்க அரசாங்கமே முன்வந்துள்ளது.

தமிழக மீனவர்களுக்கு உதவும் GPS சாதனங்கள்...பயனுள்ளதா?

அதாவது தமிழக மீனவர்ககளின் படகுகளில் அதிநவீன GPS என்ற வழி அறிதலுக்கான சாதனங்கள் பொருத்தப்படும். இதன் மூலமாக எல்லையை எளிதில் அறியலாம். எல்லையை கடக்காமல் இருப்பதற்கும் இது உதவியாகவே இருக்கும்.

இதுகுறித்து அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறுகையில்,
"தமிழக மீனவர்கள், சில நேரங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாலே சிக்கல்கள் ஏற்படுகிறது. அதை தடுக்கவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த முறையானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்."

மேலும் அவர் கூறுகையில், "கடலுக்குள் எல்லையை பிரித்தறிவது மிகவும் சிரமமானது. இந்த சிரமத்தை GPS கருவியானது போக்கும்."என்றார்.

எது எப்படியிருந்தாலும், அரசாங்கத்தின் சட்டங்களும், திட்டங்களும் ஒட்டைகளுடனே திரிகின்றன. இலங்கை தன்னுடைய போக்கையும் மாற்றப்போவதில்லை. இதற்கு தீர்வுதான் என்ன?

Skype Office Photos

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X