Google Pay ஆப்பிற்கு "மாற்றாக" புதிய Google Wallet அறிமுகம்; கடும் குழப்பத்தில் யூசர்கள்!

|

என்னப்பா? Google Pay ஆப்பில் சில அப்டேட்களை செய்து அதை Google Wallet ஆக மாற்ற முடிவு செய்துள்ளார்களாமே.. அது உண்மையா? இந்த மாற்றம் இந்தியாவிலும் நடைமுறைக்கு வருமா?

இனிமேல் கூகுள் பேவின் சேவைகள் அணுக கிடைக்காதா? Google Pay-விற்கும் Google Wallet-க்கும் ஒற்றுமைகள் உண்டா? அல்லது இரண்டும் முற்றிலும் வேறுபட்டதா? Google Wallet-இல் அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

இப்படி உங்களிடம் பல கேள்விகள் இருக்கலாம். அதற்கான எளிமையான பதில்கள் இதோ!

உண்மைதான் Google Pay ஆப் ஆனது Google Wallet ஆக மாறியுள்ளது!

உண்மைதான் Google Pay ஆப் ஆனது Google Wallet ஆக மாறியுள்ளது!

இந்த ஆண்டு நடந்த Google I/O மாநாட்டில் தான் கூகுள் நிறுவனம் அதன் 'புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட' Google Wallet-ஐ அறிவித்தது.

அதனை தொடர்ந்து கூகுள் வேலட் ஆப் ஆனது, இப்போது 39 நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அணுக கிடைக்கிறது. அதாவது சில நாடுகளில் புதிய Google Wallet ஆனது ஏற்கனவே உள்ள Google Pay ஆப்பை 'Replace' செய்து உள்ளது.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

இந்த மாற்றம் இந்தியாவிற்கும் பொருந்துமா?

இந்த மாற்றம் இந்தியாவிற்கும் பொருந்துமா?

சில நாடுகளில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கூகுள் பே ஆப்பின் "மறுவடிவமைப்பான" கூகுள் வேலட் வெளியாகி இருந்தாலும் கூட, அங்கே Google Pay மற்றும் Google Wallet ஆகிய இரண்டுமே "ஒரே செயல்பாட்டுடன்" அணுக கிடைக்கிறது.

மேலும் சில நாடுகளில் Google Wallet மட்டுமே அணுக கிடைக்கிறது. அதாவது அங்கே Google Pay காணாமல் போய்விட்டது. ஆனால் இந்தியாவில் அப்படி எந்த குழப்பமும் இல்லை!

இங்கே.. கூகுள் பே தொடர்ந்து அணுக கிடைக்கும்!

இங்கே.. கூகுள் பே தொடர்ந்து அணுக கிடைக்கும்!

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் இங்கே (அதாவது இந்தியாவில்) Google Pay ஆப் ஆனது கூகுள் பே என்கிற பெயரின் கீழேயே தொடர்ந்து அணுக கிடைக்கும் (ஆனால் வரும் காலங்களில் இது கூகுள் வேலட் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2018 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வேலட் மற்றும் ஆண்ட்ராய்டு பே ஆப்களை இணைத்து, கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கூகுள் பே ஆப்பை உருவாக்கியது.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

பின்னர் 2020 இல் ஒரு மாற்றம்.. இப்போது 2022 இல் ஒரு மாற்றம்!

பின்னர் 2020 இல் ஒரு மாற்றம்.. இப்போது 2022 இல் ஒரு மாற்றம்!

கடந்த 2020 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் அதன் Google Pay பிளாட்ஃபார்மை மேம்படுத்தி, டீல்ஸ், பியர்-டு-பியர் பேமெண்ட்ஸ் மற்றும் பல சேவைகளை கொண்டுவர உள்ளதாக அறிவித்தது. பின்னர் மே 2022 இல், Google Wallet இன் வருகை மீண்டும் அறிவிக்கப்பட்டு, இப்போது அது நடைமுறைக்கும் வந்துள்ளது.

Google Wallet இல் அப்படி என்ன ஸ்பெஷல்?

Google Wallet இல் அப்படி என்ன ஸ்பெஷல்?

கூகுள் வேலட் ஆனது, மொபைல் பேமெண்ட்டுகளுக்கான ஒன்-ஸ்டாப்-ஷாப் அணுகுமுறையாக இருக்கும். இன்னும் "ஓப்பன் ஆக" சொல்ல வேண்டும் என்றால் இது ஆப்பிளின் சொந்த Wallet App-ஐ போலவே இருக்கிறது.

அதாவது பல்வேறு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டிஜிட்டல் முறையில் சேமிப்பது, உங்கள் கட்டண விவரங்களை முன்னெப்போதை விடவும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது, நீங்கள் வெளிநாட்டிற்கு செல்கிறீர்கள் என்றால், உங்கள் இ-போர்டிங் பாஸ்களை Google Wallet இல் பதிவிறக்கம் செய்து அவற்றை பிரிண்ட் செய்து சேமிப்பது என பல வேலைகளை செய்யலாம்.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

பல வகையான மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்:

பல வகையான மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்:

ஜிமெயில் டிசைனில் மாற்றம், ஹேங்கவுட்ஸ் நீக்கம் என கடந்த பல வாரங்களாகவே கூகுள் பிளாட்ஃபார்மில் பல வகையான மாற்றங்களையும், நீக்கங்களையும் பார்க்க முடிகிறது.

அப்படியாக சமீபத்தில், கம்ப்யூட்டர்களை குறிவைக்கும் ஹேக்கர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ் Google Chrome ப்ரவுஸருக்கான (Windows, Mac மற்றும் Linux) செக்யூரிட்டி அப்டேட்களும் வெளியானது.

குறிப்பிட்ட அப்டேட்டில், High-severity (அதிக தீவிரம்) என வகைப்படுத்தப்பட்ட ஐந்து 'Fixes' உட்பட மொத்தம் 11 பிக்ஸஸ் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இடையில் 50 மால்வேர் ஆப்களுக்கும்

இடையில் 50 மால்வேர் ஆப்களுக்கும் "ஆப்பு" வைக்கப்பட்டது!

சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் Joker, Facestealer மற்றும் Coper மால்வேர் வகைகளின் கீழ் "திருட்டு வேலைகளில்" ஈடுபட்டிருந்த 50 ஆப்களும் கண்டறியப்பட்டு, தடை செய்யப்பட்டன.

Zscaler's ThreatLabz-ஐ சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, புகாரளிக்கப்பட்டு, பின் தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட 50 ஆப்களையும் சுமார் 3 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி உள்ளனர்; சிலர் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒருவேளை அந்த 3 லட்சம் பேரில் நீங்களும் ஒருவர் என்றால், அந்த 50 ஆப்களில் ஒன்றை தெரியாமல் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், அதை உடனே டெலிட் செய்யவும். குறிப்பிட்ட 50 ஆப்களின் முழு பட்டியலையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்!

கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்!

மால்வேர் ஆப்களை கண்டுபிடிப்பதும், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யச்சொல்லி எச்சரிக்கை விடுப்பதும் கூகுளுக்கு புதிதல்ல. மிகவும் வழக்கமாக நடக்கும் ஒரு வேலையே ஆகும். ஆனால் இம்முறை "கொத்தாக" 50 ஆப்கள் சிக்கி உள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் "கண்ட கண்ட" ஆப்களை, கண்மூடித்தனமாக பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியும் கூட, யூசர்கள் அதை 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்வது போல் தெரியவில்லை.

Photo Courtesy: Google Play Store

Best Mobiles in India

English summary
Google Wallet to Replace Google Pay in Many Countries How about India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X