Google-ன் புதிய Android 16 அப்டேட்.. எந்தெந்த Phone-களுக்கு வரும்? INSTALL செய்வது எப்படி? என்னென்ன அம்சங்கள்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐஓஎஸ் 26 அப்பேட்டை (iOS 26 Update) அறிமுகம் செய்த மறுநாளே கூகுள் (Google) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை (Android 16 Update) ரிலீஸ் செய்து பதிலடி கொடுத்துள்ளது
பல பயனுள்ள மேம்படுத்தல்களை கொண்டுவரும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் ஆனது ஆரம்பத்திலேயே அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்காது; மெல்ல மெல்ல தான் வந்தடையும் என்பதை உங்களில் பலரும் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.

ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் ஆனது கூகுள் பிக்சல் டிவைஸ்களுக்கு மட்டுமே வரும். பின்னர் எந்தெந்த சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஷாவ்மீ, ரெட்மி, நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வரும் என்கிற பட்டியலை உள்ளடக்கிய எங்கள் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் என்னென்ன கூகுள் பிக்சல் டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும் (Android 16 supported Pixel devices)? பிக்சல் டிவைஸ்களில் இதை இன்ஸ்டால் செய்வது எப்படி? கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் (புதிய அம்சங்கள்) என்னென்ன? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்
என்னென்ன கூகுள் பிக்சல் டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும்? கீழ் வரும் பட்டியலில் உங்களுடைய கூகுள் பிக்சல் டிவைஸ் (ஸ்மார்ட்போன், போல்டபிள் போன், டேப்லெட்) இருந்தால், உங்களுக்கு ஓடிஏ (OTA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓவர்-தி-ஏர் டவுன்லோட் (Over-the-air download) மூலம் கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும்:
- கூகுள் பிக்சல் 6
- கூகுள் பிக்சல் 6 ப்ரோ
- கூகுள் பிக்சல் 6ஏ
- கூகுள் பிக்சல் 7
- கூகுள் பிக்சல் 7 ப்ரோ
- கூகுள் பிக்சல் 7ஏ
- கூகுள் பிக்சல் 8
- கூகுள் பிக்சல் 8 ப்ரோ
- கூகுள் பிக்சல் 8ஏ

- கூகுள் பிக்சல் 9
- கூகுள் பிக்சல் 9 ப்ரோ
- கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்
- கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட்
- கூகுள் பிக்சல் 9ஏ
- கூகுள் பிக்சல் ஃபோல்ட்
- கூகுள் பிக்சல் டேப்லெட்
உங்கள் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது எப்படி (How to install Android 16 on Pixel phone)?
- செட்டிங்ஸ் ஆப்பை (Settings App) திறக்கவும்.
- சிஸ்டம் (System) விருப்பத்தை அதையே கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்
-சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
- செக் ஃபார் அப்டேட்ஸ் (Check for Updates) என்பதை கிளிக் செய்யவும்
- ஆண்ட்ராய்டு 16 அப்டேட் உங்களுக்கு கிடைத்தால், டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் (Download and Install) என்பதை கிளிக் செய்யவும்
-குறிப்பிட்ட அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் உங்கள் பிக்சல் போனை ரீஸ்டார்ட் (Restart) செய்யவும்.
ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் (Android 16 Major features ):
- ரியல்டைம் அப்டேட்ஸ் மற்றும் க்ளீன் ஆன நோட்டிபிகேஷன்ஸ் (Real-time updates and cleaner notifications)
- காது கேட்கும் கருவிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கான தெளிவான கால்கள் (Clearer calls for hearing aid users)
- மேம்பட்ட பாதுகாப்பு (Advanced Protection)
- பெரிய ஸ்க்ரீன்களில் இன்னும் சிற்ப்பான மல்டி டாஸ்கிங் (Better multitasking on big screens)
- எச்டிஆர் ஸ்க்ரீன்ஷாட்ஸ் ஆதரவு (HDR screenshots)
- அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு (Adaptive refresh rates)


Click it and Unblock the Notifications








