பூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா?

|

புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதை உடனடியாக சரிபார்த்துக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், உலகின் சில பகுதிகளில் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் வாழ்க்கை வாழக்கூடிய வாழ்வாதார வெப்பத்தை விட, பல மடங்கு அதிகமான, கடுமையான வெப்ப மாற்றத்தைச் சந்திக்க நேரிடும் என்ற திடுக்கிடும் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

3 பில்லியன் மக்கள் கொடூரமான வெப்பத்தினால் பாதிக்கப்படுவார்கள்

3 பில்லியன் மக்கள் கொடூரமான வெப்பத்தினால் பாதிக்கப்படுவார்கள்

இந்த ஆண்டிலிருந்து சரியாக 50 வருடங்களில் உலக மக்கள்தொகையில் பெரும்பகுதி, மனித வாழ்க்கை செழிக்க ஏற்றதாகக் கருதப்படும் நிலைமைகளை விட, மிகக் கடுமையான வெப்பமான காலநிலை நிலைமைகளில் வாழ வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதனால், சுமார் 3 பில்லியன் மக்கள் கொடூரமான வெப்பத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்ற திடுக்கிடும் தகவலைத் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

6,000 ஆண்டுகளாக இல்லாத மாற்றம்

6,000 ஆண்டுகளாக இல்லாத மாற்றம்

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்காவிட்டால், சராசரி வருடாந்திர வெப்பநிலை சுமார் 6,000 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, மனிதர்கள் வாழக்கூடிய வெப்பநிலைக்கு அப்பால் உயரும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. இதன்படி கணக்கிட்டுப் பார்க்கையில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை சுமார் 52 முதல் 59 பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். 59 பாரன்ஹீட் என்பது தோராயமாக சுமார் 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

ஆய்வின் முடிவுகள் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

ஆய்வின் முடிவுகள் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

பூமியின் இந்த வெப்பநிலை மாற்றமானது, வழக்கம் போல் நிகழும் காலநிலை மாற்றச் சூழ்நிலைகள் போன்று இல்லாமல், இந்த வெப்பநிலை மாற்றமானது அடுத்து வரவிருக்கும் 50 ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமி வரலாற்றில் கடந்த 6,000 ஆண்டுகளில் ஏற்படாத மிகப் பெரிய மாற்றமாக இந்த வெப்பநிலை மாற்றம் இருக்கும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் உமிழ்வுகளால் ஏற்படும் ஆபத்து

அதிகரித்து வரும் உமிழ்வுகளால் ஏற்படும் ஆபத்து

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வளிமண்டல செறிவு அதிகமாக உள்ளது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதினால், கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் மீத்தேன் போன்ற "கிரீன்ஹவுஸ்" வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்திலும், கடல்களிலும் வெளியிடப்படுகிறது. அதிகரித்து வரும் உமிழ்வுகளால் கிரகத்தின் வெப்பநிலை இயற்கை காரணிகளால் விளக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2070 ஆம் ஆண்டில் மனிதக்குலம் இதை சந்திக்கக்கூடும்

2070 ஆம் ஆண்டில் மனிதக்குலம் இதை சந்திக்கக்கூடும்

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வின் விளைவாக அடுத்த சில தசாப்தங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை குறைப்பு அல்லது எந்தவித மாற்றமும் இல்லாமல், வரும் 2070 ஆம் ஆண்டின் வாக்கில் மனிதக்குலத்தின் கணிசமான பகுதி இன்று இருக்கக்கூடிய சராசரி வருடாந்திர வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமான வெப்பத்தைச் சந்திக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

OnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! எதிர்பாராமல் ஒன்றின்பின் ஒன்றாக ஆப்பு!

கொடூரமான வெப்பமான காலநிலை இப்பொழுது காணப்படும் இடம்

கொடூரமான வெப்பமான காலநிலை இப்பொழுது காணப்படும் இடம்

ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் கொடூரமான வெப்பமான காலநிலை நிலைமைகள் தற்போது, உலக நிலப்பரப்பில் வெறும் 0.8% மட்டுமே அனுபவிக்கின்றது, பெரும்பாலும் இந்த வெப்பநிலை சஹாரா பாலைவனத்தின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், 2070 ஆம் ஆண்டின் வாக்கில் இந்த வெப்ப நிலைமைகள் பூமியின் நிலப்பரப்பில் சுமார் 19% வரை பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கக்கூடும்

இந்த பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கக்கூடும்

இதில் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, வடக்கு தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் அடங்கும். பூமியின் ஒரு மிகப் பெரிய பகுதி மக்கள் அரிதாகவே உயிர்வாழக்கூடிய அளவிற்கு வெப்பமடையும், அவை மீண்டும் இயல்பு நிலைக்கு மாறாது என்றும், மீண்டும் குளிர்ச்சியடையாது என்றும் நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் மார்டன் ஷெஃபர் கூறியுள்ளார்.

புதிய தொற்றுநோய்கள் தோன்றினால் சிக்கல்

புதிய தொற்றுநோய்கள் தோன்றினால் சிக்கல்

இந்த நிகழ்வு பேரழிவு தரக்கூடிய நேரடி விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய தொற்றுநோய்கள் போன்ற எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க சமூகங்களுக்குக் குறைந்த திறனைக் கொடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

கார்பன் உமிழ்வைக் கட்டாயம் குறைக்க வேண்டும்

கார்பன் உமிழ்வைக் கட்டாயம் குறைக்க வேண்டும்

இப்படி பூமியின் வெப்பநிலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு மாறாமல் இருக்கவும், மனித வாழ்க்கை வாழமுடியாத வெப்பநிலைக்குச் செல்லாமலும் இருக்க கார்பன் உமிழ்வைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு நல்ல செய்தியும் உள்ளது

இதில் ஒரு நல்ல செய்தியும் உள்ளது

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை விரைவாகக் குறைப்பது இத்தகைய வெப்பமான நிலைமைகளுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கக்கூடும். புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் மனித குளம் வெற்றி பெற்றால், இந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைக்கப்படலாம் என்பது ஒரு நல்ல செய்தி என்று ஐக்கிய இராச்சியத்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் காலநிலை நிபுணர் ஆய்வின் இணை ஆசிரியர் டிம் லென்டன் கூறியுள்ளார்.

உலகிற்கு இந்த தகவலை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம்

உலகிற்கு இந்த தகவலை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம்

பூமியின் வெப்பம் ஒவ்வொரு டிகிரி வெப்ப மயமாதலும் (செல்சியஸ்) தற்போதைய நிலைகளுக்கு மேலே சுமார் 1 பில்லியன் மக்களுக்கு ஒத்திருக்கிறது என்பதை எங்கள் கணக்கீடுகள் காட்டுகின்றன," என்று லென்டன் கூறினார். அதேபோல், கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைத் தடுப்பதன் நன்மைகளை நாம் இப்போது உலகிற்கு வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் என்றும், அனைவரும் எதிர்கால விளைவுகளை உணர்ந்து அவசியம் இந்த உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

உண்மை தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியளர்கள்

உண்மை தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியளர்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் வல்லுநர்கள் மற்றும் காலநிலை விஞ்ஞானிகள் அடங்கிய சர்வதேச ஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு, திங்களன்று தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் என்ற மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!

பூமியின் அடுத்த பேரிடர் இதுவாக இருக்கலாம்

பூமியின் அடுத்த பேரிடர் இதுவாக இருக்கலாம்

இந்த தகவல்கள் பூமி அடுத்த பேரிடரை சந்திக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாக மற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் வாழ்க்கையும், மனிதகுலத்தின் வாழ்க்கையும் நாம் செய்யும் விளைவுகளில் ஒன்றியுள்ளது என்பதை உணருங்கள்.

Best Mobiles in India

English summary
Global Warming Increase Leads 3 Billion Humans To Live In Extreme Heat By 2070 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X