OnePlus 8 Pro வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! எதிர்பாராமல் ஒன்றின்பின் ஒன்றாக ஆப்பு!

|

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விற்பனை பல நாடுகளில் துவங்கிப் பல யூனிட்கள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியிடப்பட்ட சிறிது நாட்களில் எதிர்பாராத விதமாகப் பல சாதனங்களில் மிகப் பெரிய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்பிளஸ் 8 ப்ரோ வாங்கிய பயனர்கள் பெரும் மண வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ சாதனத்தில், எதிர்பாராத விதமாக "க்ரீன் டின்ட்" மற்றும் "பிளாக் க்ரஷ்" எனப்படும் இரண்டு டிஸ்பிளே கோளாறுகள் இருப்பதை நிறுவனம் ஒப்புக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியான சில நாட்களுக்குப் பிறகு, டிஸ்பிளே சிக்கல்களைச் சரிசெய்ததாகக் கூறப்படும் புதிய அப்டேட்களையும் நிறுவனம் வெளியிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

க்ரீன் டின்ட் மற்றும் பிளாக் க்ரஷ் டிஸ்பிளே கோளாறு

க்ரீன் டின்ட் மற்றும் பிளாக் க்ரஷ் டிஸ்பிளே கோளாறு

க்ரீன் டின்ட் மற்றும் பிளாக் க்ரஷ் டிஸ்பிளே கோளாறு சரி செய்யும் அப்டேட் வெர்ஷனை நிறுவனம் வெளியிட்ட பிறகும் இன்னும் பல சாதனங்களில் இந்த கோளாறு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது என்று இணையம் முழுவதிலும் உள்ள ஒன்பிளஸ் 8 ப்ரோ பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்டேட் செய்த பின்னாலும் டிஸ்பிளே சிக்கல்கள் இன்னும் நீடிப்பதாக்க அவர்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியுள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி?உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி?

பணம் திருப்பி தரப்படுமா?

பணம் திருப்பி தரப்படுமா?

ரெடிட் ஒன்பிளஸ் கம்யூனிட்டியை சேர்ந்த ஒரு பயனர் வெளியிட்ட தகவல்படி, ஒன்பிளஸ் சப்போர்ட் எக்சிக்யூட்டிவ் ஒருவர் இந்த "பிளாக் க்ரஷ்" சிக்கலை, ஒன்பிளஸ் போனில் ஏற்பட்டுள்ள ஒரு வன்பொருள் குறைபாடு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார், மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் வழக்கம் போல் பழுதுபார்ப்பு, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மாற்றீடு உள்ளிட்ட விருப்பங்களையும் இதற்காக வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்டேட்டிற்கு பின்னாலும் கோளாறு

அப்டேட்டிற்கு பின்னாலும் கோளாறு

இந்த தகவலைத் தீவிரமாக விசாரித்த போது, ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சிக்கலை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், சரியாகக் கவனிக்கவில்லை என்பதும் தெரிகிறது. நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டிற்கு பின்னாலும் கோளாறு நீடிப்பது தற்பொழுது சிக்கலை உருவாக்கியுள்ளது.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

மென்பொருள் அப்டேட்களை கொண்டு சரிசெய்யும் முயற்சி

மென்பொருள் அப்டேட்களை கொண்டு சரிசெய்யும் முயற்சி

எனவே, ஒன்பிளஸ் 8 ப்ரோவின் மாற்றுதல் அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஏப்ரல் மாத இறுதியில் ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில் ஏற்பட்டுள்ள இரண்டு டிஸ்பிளே கோளாறுகளை மென்பொருள் அப்டேட்களை கொண்டு சரிசெய்யும் முயற்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

ஆக்ஸிஜன்OS புதிய வெர்ஷன்

ஆக்ஸிஜன்OS புதிய வெர்ஷன்

இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஆக்ஸிஜன்OS 10.5.5 மற்றும் ஆக்ஸிஜன்OS 10.5.6 அப்டேட்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், சில பயனர்களுக்கான இன்னும் இந்த க்ரீன் டின்ட் மற்றும் பிளாக் க்ரஷ் டிஸ்பிளே கோளாறுகள் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்று ஆன்லைனில் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!கருந்துளை விழுங்கியும் உயிர்பிழைத்த நட்சத்திரம்!

இந்தியாவில் எப்பொழுது ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியாகும்?

இந்தியாவில் எப்பொழுது ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியாகும்?

இந்தியாவில் எப்பொழுது இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிச்சயம் இந்த டிஸ்பிளே கோளாறுகள் முற்றிலுமாக சரி செய்த பின்னரே, ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8 ப்ரோ சாதனத்தை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro Is Facing Display Issues Already : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X