Home
News

இபே இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்

இபே இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்

By Siva

இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ப்ளிப்கார்ட் நிறுவனமும் மற்றொரு இகாமர்ஸ் நிறுவனமான இபே இந்தியா என்ற நிறுவனத்தை $2 பில்லியன் விலை கொடுத்து வாங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கை இகாமர்ஸ் உலகில் முன்னணி இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இபே இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்

இந்தியாவில் தற்போது $15 பில்லியன் அளவுக்கு இகாமர்ஸ் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அமேசன், ப்ளிப்கார்ட், ஷாப்குளவுஸ், பேடிஎம், ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களை அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளது இபே இந்தியா. முன்னணி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவே இபே இந்தியா ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைய முடிவு செய்துள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனம் இபே இந்தியாவை கைப்பற்ற $2 பில்லியன் தொகை தேவைப்பட்ட நிலையில் புதியதாக $1பில்லியன் தொகையை முதலீடு செய்தது. மீதித்தொகையை மைக்ரோசாப்ட் மற்றும் இபே இந்தியாவை பங்காக இணைத்து கொண்டதால் இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளதாக வர்த்தக உலகின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அறிமுகம் : செல்பீ ப்ளாஷ் கொண்ட இன்டெக்ஸ் அக்வா ப்ரைம் 4ஜி.!

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு $10 பில்லியன் என்று இருப்பதால் சந்தையில் வலிமையாக செயல்பட முடியும். குறிப்பாக அமேசான் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக செயல்பட இனி முயற்சி செய்யும். அமேசான் நிறுவனத்தின் மதிப்பு $15.1 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து ப்ளிப்கார்ட் நிறுவனம் $4.1 பில்லியன் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தான் இகாமர்ஸ் உலகின் முதல் இடத்தில் இருந்து வரும் அமேசான் நிறுவனத்தின் முதலீட்டை ப்ளிப்கார்ட் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களாக சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர்கள் சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை கல்யாண் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே நியூயார்க் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ ஆக இருந்தவர் என்பதால் இவர் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக ப்ளிப்கார்ட் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Flipkart raising $2 Billion, set to acquire eBay India and improve market share in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X