அறிமுகம் : செல்பீ ப்ளாஷ் கொண்ட இன்டெக்ஸ் அக்வா ப்ரைம் 4ஜி.!
இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.? விலை நிர்ணயம் என்ன.?
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்டெக்ஸ் நிறுவனம் அதன் சமீபத்திய கருவியான அக்வா ப்ரைம் 4ஜி எனப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கேமரா அம்சத்தை மையமாக கொண்டு வெளியாகியுள்ளன இக்கருவி முன் எதிர்கொள்ளும் செல்பீ ப்ளாஷ் கொண்டு வெளியாகியுள்ள நிறுவனத்தின் முதல் கருவியாகும்.

ரூ.6,555/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இன்டெக்ஸ் அக்வா ப்ரைம் 4ஜி கருவியானது இரட்டை எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்ட ஒரு 2-மெகாபிக்சல் செலீ ஸ்நாப்பர் கொண்டுள்ளது மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் கொண்டுள்ளது.
இக்கருவியின் கேமராவானது எச்டிஆர், பனோரமா மற்றும் ஆட்டோ கேட்ச் மோட் ஆகிய அம்சங்களையும் வழங்கிப்பிடுகிறது. வெள்ளை, சாம்பல் மற்றும் மதுவை ஆகிய மூன்று வண்ண வகைகளில் வெளியாகியுளள இக்கருவி அளவீட்டில் 154.5x 77.5x 8.3மிமீ மற்றும் 158 கிராம் எடை கொண்டுள்ளது. உடன் 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, ஒரு 32-பிட் க்வாட்-கோர் மீடியா டெக் எம்6735 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் கிராபிக்ஸ் பலகையில் ஒரு மாலி 760 ஜிபியூ மூலம் கடத்தப்படுகின்றன.
32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. 500 மணி நேர காத்திருப்பு நேரம் மற்றும் 11 மணி நேர பேச்சு நேரம் வழங்கும் என்று நிறுவனத்தினால் கூறப்படும் ஒரு 2,800எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இரட்டை சிம் அட்டை, 4ஜி வோல்ட், வைஃபை பி / ஜி /என் , ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் , யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது.
மேலும் படிக்க
சூடுபிடிக்கும் ஆட்டம் : நோக்கியா, ஆப்பிளுக்கு சாம்சங் சரியான பதிலடி.!
13 எம்பி டூவல் கேமரா கொண்டு அதிரடியாக களம் காணும் டூவல் 5.!
இதுதான் உலகின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போன்.!


Click it and Unblock the Notifications