ஃபேஸ்புக்கினால் 2014 தேர்தலில் 30% முடிவை மாற்றமுடியுமாம்!

சமூக வலைத்தளங்களின் ராஜாவான ஃபேஸ்புக் பயனாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்தவரே இருப்பது தெரிந்ததே! இந்த ஃபேஸ்புக் பல மாற்றங்களையும், சிக்கல்களையும் மக்கள் மத்தியில் பரப்பிவந்தாலும் வர்த்தகரீதியில் பலருக்கு நல்ல வருமானத்தை பெற்றுத்தருகிறது.
ஃபேஸ்புக் மூலமாக வர்த்தகங்களில் மட்டுமே மாற்றங்கள் வரவில்லை 2012ல் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் பெரிய மாற்றம் வரவும் காரணமாக அமைந்ததாகவும், ஒபாமா வெற்றிக்கு ஃபேஸ்புக் பெரிதும் உதவியதாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
தற்பொழுது இதே சூழல் இந்தியாவில் நடைபெறவுள்ள 2014 தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று IRIS அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவிலும் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் தொடங்கியுள்ளதால் எதுவும் சாத்தியம் என்கிறது இந்த அறிக்கை.
தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?
இந்திய ஃபேஸ்புக் பயனாளர்களில் 10 சதவிகிதத்தினர் ஓட்டுப்போடும் வயதுடையவர்கள். இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ள 2014 நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை 30% வரை மாற்றியமைக்கவும், பதிப்பை ஏற்படுத்தவும் முடியும் என்கிறது இதே அறிக்கை.
காத்திருந்து பார்க்கலாம். மோடி போன்றவர்களுக்கு ஃபேஸ்புக் பக்கம் இன்னும் செல்வாக்கு இருப்பதை உணரமுடிகிறது!


Click it and Unblock the Notifications








