இண்டர்நெட் உலகில் மிகவும் பழமையானது இமெயில் தான்: ஒரு ஆச்சரிய தகவல்

By Siva
|

நாம் தற்போது இமெயில் உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சொந்த விஷயங்கள், அலுவலக விஷயங்கள் ஆகியவற்றை தற்போது பெரும்பாலும் இமெயிலில் தான் பகிர்ந்து கொள்கிறோம்.

இண்டர்நெட் உலகில் மிகவும் பழமையானது இமெயில் தான்: ஒரு ஆச்சரிய தகவல்

நம் அனைவருக்கும் குறைந்தது நாள் ஒன்றுக்கு ஐந்து மெயில்களாவது வரும். எனவே இமெயில் என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இமெயில் மூலம் முன்னணி நிறுவனங்கள் கூட விளம்பரப்படுத்துகிறது என்றால் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இமெயில் என்ற வார்த்தையை கூட கேள்விப்படாத பலர் இருந்தனர். போன், செல்போன் வந்தும் கூட இமெயில் குறித்த விழிப்புணர்வு இன்றி பலர் இருந்தனர். ஆனாலும் அந்த காலத்தில் இமெயிலை ஒருசிலர் பயன்படுத்தி வந்தனர் என்பதுதான் உண்மை.

இண்டர்நெட் உலகில் மிகவும் பழமையானது இமெயில் தான்: ஒரு ஆச்சரிய தகவல்

ஆனால் 2000ஆம் ஆண்டில் இமெயில் குறித்த விழிப்புணர்வு பலருக்கு தெரிந்தது. அது மென்மேலும் வளர்ந்து 2009 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 32% இமெயில் உபயோகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் சுமார் 600 மில்லியன் மக்கள் தினந்தோறும் இமெயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஒருசிலர் இந்த இமெயில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருவதாகவும் வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெக்னாலஜி இது இல்லை என்றும் கூறி வருகின்றனர். இமெயிலுக்கு முன்னர் ஒரு பைலை இன்னொரு இடத்திற்கு அனுப்பும் வசதி இருந்தாலும் அதை உடனே படிக்க இயலாத நிலை தான் இருந்தது.

4ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி உடன் சில்வர் மாறுபாட்டில் நோக்கியா 6.!

முதன்முதலாக கடந்த 1965ஆம் ஆண்டு மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் தான் இமெயில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. இந்த டெக்னாலஜியில் ஒருவர் தான் பயன்படுத்தும் அதே நெட்வொர்க்கில் மட்டும் தகவல் அனுப்பும் வகையில் இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் டெக்ஸ்டாப் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இண்டர்நெட்டும் பயன்படுத்த தொடங்கிய பின்னர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மிக எளிதாக செல்லும் தற்போதைய இமெயில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராய் டாம்லின்சன் என்பவர் தான் இமெயிலின் மாஸ்டர் மைண்ட் நபர். இவர் கடந்த 1972ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்த நபர்களுடன் இணைந்து இமெயிலை கண்டுபிடித்தார். மேலும் @முறையை இமெயிலில் இணைக்கும் முறையை கண்டுபிடித்த பெருமை இவருக்கே சேரும்

இதன்பின்னர் அனைத்து கீபோர்டுகளிலும் @ புதியதாக இணைக்கப்பட்டு அதை மல்டி பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த முறையை ஜான் போஸ்டல் என்பவர் மேலும் விரிவுபடுத்தி முறைப்படுத்தினார்.

SMTP என்ற (Simple Message Transfer Protocol) என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் அனுப்பப்பட்ட இமெயில்தான் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த முறையில் அனுப்பும்போது வைரஸ் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருந்தது. எனவே இதை பயன்படுத்தி முறைகேடுகளும் அதிகரித்தது.

அதன் பின்னர்தான் POP என்னும் (Post Office Protocol) என்ற சர்வர்கள் மூலம் பாதுகாப்பான இமெயில்கள் அனுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இமெயில் என்பது கோடிக்கணக்கான நபர்களுக்கு நண்பர்களை போல உதவி செய்து வருகிறது. உலகில் உள்ள பெரும்பாலானோர் தினசரி ஒரு மெயிலாவது ரிசீவ் செய்து வரும் டெக்னாலஜி தற்போது வளர்ந்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Since 2000, the number of people using email has grown significantly.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X