வயிறு எரியுதா? ISRO-வுடன் ஒப்பிட்டு கேலி செய்தவர்களின் மூக்கை உடைத்த Elon Musk.. அப்படி என்ன செய்தார்?
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) ஒரு தரமான சம்பவத்தை செய்தது. சிங்கப்பூரை சேர்ந்த 2 செயற்கைகோள்களை தனது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் (PSLV C55 Rocket) வழியாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோவின் இந்த வெற்றிக்காக, உலகின் இரண்டாவது பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ஏன் கேலி செய்யப்பட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்.. ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி என்ன நடந்தது என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியன்று, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அதன் புதிய ரீயூஸபிள் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் (Reusable Starship Rocket) விமான சோதனையை (Test Flight) நடத்தியது. துரதிர்ஷ்டவசமாக அது தோல்வியில் முடிந்தது.
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆனது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள "இடங்களுக்கு" விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகள் ஆகிய இரண்டையும் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான ரீயூஸபிள் டிரான்ஸ்போர்ட்டேஷன் சிஸ்டமாகும் (Fully Reusable Transportation System).
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தன்னுடைய 'ஸ்டார்ஷிப்பை' இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த லான்ச் வெஹிக்கல் (World's Most Powerful Launch Vehicle ) என்று கூறுகிறது. அப்படியான ஒரு ராக்கெட் தோல்வியில் முடிந்த அடுத்த 2 நாட்களில் இஸ்ரோ அதன் பிஎஸ்எல்வி சி55 மிஷனை வெற்றிகரமாக முடித்தால்.. என்ன நடந்து இருக்கும்?
வேறென்ன நடந்திருக்கும்? நெட்டிசன்களுக்கு சூப்பரான 'கன்டென்ட்' கிடைத்து இருக்கும்! "என்ன பாஸ்.. இஸ்ரோவை பார்த்து வயிற்று எரிச்சலாக இருக்கிறதா?" என்கிற கேலிகள் சமூக வலைத்தளங்களில் கிளம்பி இருக்கும். இஸ்ரோவுடன் ஒப்பிட்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் "வறுக்கப்பட்டு" இருக்கும். உண்மையில் அதுதான் நடந்தது!
இதற்கிடையில் தான் எலான் மஸ்க் "மிகவும் கூலான" ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி55 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், இஸ்ரோவிற்கு "வாழ்த்துக்கள்" கூறியுள்ளார்!
பிஎஸ்எல்வி-சி55 விண்கலத்தின் வெற்றிக்கு பின்னர் இஸ்ரோ பதிவிட்ட ட்வீட்டில் "வாழ்த்துக்கள்" என்று எலான் மஸ்க் 'ரிப்ளை' செய்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த செயல், நேற்றுவரையிலாக அவரையும், அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் கேலி செய்தவர்களை சற்றே அமைதிப்படுத்தும் என்பது போல் தெரிகிறது.
எலான் மஸ்க் வந்து வாழ்த்து சொல்லும் அளவிற்கு பிஎஸ்எல்வி-சி55 விண்கலம் முக்கியமானதா என்று கேட்டால்... ஆம் கண்டிப்பாக முக்கியமானது தான்! ஏனென்றால் இது, இந்த ஆண்டில் நடந்த மூன்றாவது மிகப்பெரிய விண்வெளி மிஷனாகும். மேலும் 228 டன் எடையுள்ள பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்வது இது 57வது முறையாகும்!
இதன் மூலம் செயற்கைக்கோள் ஏவுதலுக்கான நம்பகமான (Reliable) மற்றும் செலவு குறைந்த (Cost-effective) விருப்பமாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் தன்னை - மீண்டும் ஒருமுறை - நிலைநிறுத்தி கொண்டது. சமீபத்தில் இஸ்ரோவின் ரீயூஸபிள் லான்ச் வெஹிக்கில் (Reusable launch vehicle - RLV) வெற்றிகரமான சோதிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications








