Home
News

சிலிர்த்துப்போன சிங்கப்பூர்.. 757 கிலோ.. அசால்ட் ஆக விண்ணில் ஏவிய ISRO.. இந்தியாவிற்கு இதெல்லாம் சகஜம்!

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது "இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சகஜமப்பா!" என்று கூறும்படியான ஒரு காரியத்தை இன்று (ஏப்ரல் 22, சனிக்கிழமை) செய்துள்ளது. அதென்ன காரியம்? அதை பார்த்து சிங்கப்பூர் (Singapore) சிலிர்த்துப்போக என்ன காரணம்? இதோ விவரங்கள்:

சிங்கப்பூரை சேர்ந்த 2 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமான விண்ணில் செலுத்தியது. இந்த 2 செயற்கைகோள்களும் போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கல் (Polar Satellite Launch Vehicle) என்று அழைக்கப்படும் பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சிலிர்த்துப்போன சிங்கப்பூர்! 757 கிலோ.. அசால்ட் ஆக விண்ணில் ஏவிய ISRO!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சரியாக இன்று (ஏப்ரல்) பிற்பகல் 2.19 மணிக்கு ஏவப்பட் இந்த விண்வெளி திட்டம் பிஎஸ்எல்வி-சி55 மிஷன் (PSLV-C55 mission) என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் சிங்கப்பூரை சேர்ந்த 2 பெரிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில் ஒன்று, டெலிஓஎஸ்-2 (TeLEOS-2) என்று அழைக்கப்படும் சிந்தெடிக் அப்பெர்ஷர் ரேடார் சாட்டிலைட் (Synthetic Aperture Radar satellite) ஆகும். இதை விண்ணில் செல்லுவதே பிஎஸ்எல்வி-சி55 மிஷனின் முதன்மை பணியாகும். இருப்பினும் இதனுடன் லும்லைட்-4 (Lumelite-4) என்கிற ஒரு தொழில்நுட்ப செயல்விளக்க நானோ செயற்கைக்கோளும் (Technology demonstration nano-satellite) சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

பிரதான சாட்டிலைட் ஆன டெலிஓஎஸ்-2, ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு (Hotspot monitoring) மற்றும் மூடுபனி மேலாண்மை (Haze management), விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு (Air crash search and rescue) நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய புகைப்படங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுபுறம் உள்ள, லும்லைட்- 4 சாட்டிலைட் ஆனது சிங்கப்பூரால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட 12யு செயற்கைக்கோள் (12U Satellite) ஆகும். இது ஹை-பெர்ஃபார்மென்ஸ் ஸ்பேஸ்-போர்ன் விஎச்எஃப் டேட்டா எக்ஸ்சேன்ஜ் சிஸ்டமின் (High-Performance Space-borne VHF Data Exchange System) தொழில்நுட்ப விளக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் வழியாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த சிங்கப்பூர் இரண்டு செயற்கைக்கோள்களின் மொத்தம் எடை மட்டுமே சுமார் 757 கிலோ ஆகும். சுவாரசியமாக, இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் உடன் அனுப்பப்பட்டது இரண்டே இரண்டு செயற்கைகோள்கள் மட்டுமே அல்ல; ஒரு பட்டியலே உள்ளது!

இந்த மிஷனில் பிஎஸ்எல்வி இன் ஆர்பிட்டால் ஆப்க் அண்ட் தெர்மல்ஸ் (PSLV In orbital Obc and Thermals -PiLOT), ஒரு ஓபிசி பேக்கேஜ் (OBC Package) மற்றும் அயனோஸ்பிரிக் ஆய்வுகளுக்காக ஐஐஎஸ்டி-யில் (IIST) இருந்து ஒரு மேம்பட்ட ரிடார்டிங் பொட்டன்ஷியல் அனலைசரும் (Advanced Retarding Potential analyser - ARIS-2) அடக்கம்.

மேலும் எச்இடி-அடிப்படையிலான ARKA200 எலெக்ட்ரானிக் ப்ரோபல்ஷன் சிஸ்டமிலிருந்து பெல்லாட்ரிக்ஸ் (Bellatrix), துருவா ஸ்பேஸில் (Dhruva Space) இருந்து எஸ்- & எக்ஸ்- பேண்ட்களில் டிஎஸ்ஓஎல்-ட்ரான்ஸ்சீவர் உடனான டிஎஸ்ஓடி-3யு (DSOD-3U) மற்றும் டிஎஸ்ஓடி-6யு (DSOD-6U) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸில் ( Institute of Astrophysics - IAP) இருந்து ஸ்டார்பெர்ரி சென்ஸ் பேலோட் (Starberry Sense Payload) ஆகியவைகளும் இந்த மிஷனில் அடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
isro successfully launched 2 singapore satellites to space here is all details about pslv c55 mission
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X