இணைய விற்பனை நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக வழக்கு!

Posted By:

இணைய விற்பனை நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக வழக்கு!

இன்றைய சூழலில் நாம் பொருள்களை நேரில் கடைகளுக்கு சென்று வாங்கவேண்டியதில்லை. இணையம் வழியாக வாங்கினாலே பொருள்கள் வீட்டைத் தேடிவரும். இதற்காக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இம்மாதிரி இணைய விற்பனையில் 'டிம்தாரா'[TimTara] என்ற தளம் செயல்பட்டு வருகிறது. இத்தளத்தில் சாதனங்களான, மொபைல் போன்கள், லேப்டாப்புகள் மற்றும் அதுசார்ந்த உதிரி பாகங்கள், கேமராக்கள் என பல்வேறு சாதனங்களை விற்பனை செய்கிறார்கள். பணம் செலுத்தி குறிப்பிட்ட சாதனங்களை வாங்கியதும் பொருள்கள் வீட்டைத் தேடிவரும் என்பதே இந்நிறுவனத்தின் அடிப்படை வசனம். ஆனால் பொருள்கள் வாங்கிய 200 வாடிக்கையாளர்களுக்கு சாதனங்கள் அனுப்பப்படவே இல்லை என புகார் வந்ததை அடுத்து இந்நிறுவனத்தின் துணை நிறுவுனர் அரிந்தம் போஸ் மற்றும் CEOவாக இருந்தவரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ரூ.12 லட்சம் ஏமாற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் தளத்தில் நுழைந்தவுடனே ஒரு திரைதோன்றி, நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. என தகவல்கள் வெளியிடுகிறார்கள். இம்மாதிரி தளங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என காவல்துறை தெரிவித்தது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot