Subscribe to Gizbot

'டூம்ஸ்டே' எனப்படும் கடைசி நாள்..?!

Posted By:

உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞர்கள், அண்டவியல் ஆய்வாளர்கள், அறிவியல் விஞ்ஞானிகள் என பலரும், பெரும் அளவிலான அதிநவீன தொழில்நுட்பங்களையும், சாத்தியமான கோட்பாடுகளையும் கொண்டு, தெளிவாக ஆராய்ந்து பேரழிவுகளை முன்கூட்டியே கணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியான உலக அழிவு பற்றி அவ்வப்போது புரளிகளும், கட்டுக்கதைகளும் வந்து போனாலும், எது உண்மை நிலை..?, பூமி கிரகம் அப்படி என்னதான் அண்டவியல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கிறது..? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே பதில் தெரியும்..!

அப்படியாக, 'டூம்ஸ்டே' என்றால் என்ன..? டூம்ஸ்டே அச்சங்கள் என்ன என்பதை பற்றிய விளக்க கட்டுரையே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டூம்ஸ்டே :

டூம்ஸ்டே :

உலக இருப்பின் கடைசி நாளை தான் - டூம்ஸ்டே (Doomsday) என்கிறார்கள்..!

காலயியல் குறிப்பு :

காலயியல் குறிப்பு :

ஆபிரகாமிய சமயங்களை (Abrahamic religions) சார்ந்த காலயியல் (Eschatological) குறிப்புகளில், 'டூம்ஸ்டே' எனப்படும் உலகின் கடைசி நாள் பற்றி விளக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது..!

டூம்ஸ்டே பிலிவர்ஸ் :

டூம்ஸ்டே பிலிவர்ஸ் :

உலக அழிவு உறுதி என்பதை நம்புபவர்கள் - வேர்ல்ட் எண்ட் பிலிவர்ஸ் (World End Belivers) என்றும், டூம்ஸ்டே எனப்படும் உலக இருப்பின் கடைசி நாள் என்பதை நம்புபவர்கள் டூம்ஸ்டே பிலிவர்ஸ் (Doomsday Belivers) என்றும் குறிப்பிடப்படுவார்கள்.

டூம்ஸ்டே அச்சங்கள் :

டூம்ஸ்டே அச்சங்கள் :

உலகின் கடைசி நாள் இதுவாக இருக்கலாம் என்று டூம்ஸ்டே பிலிவர்ஸ்கள் நம்பும் விடயங்களை தான் டூம்ஸ்டே அச்சங்கள் (Doomsday Fears) என்பார்கள்.

ஒரே நொடி :

ஒரே நொடி :

இருப்பினும், உலக அழிவு என்பது ஒரே நாளில் அல்லது ஒரே நொடியில் நிகழ்ந்து விடாது என்பது தான் பல விஞ்ஞானிகளின் ஆய்வுக் கருத்தாகும். (உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!)

முடிவு :

முடிவு :

அப்படியாக அறிவியல் பூர்வமாகவும், சாத்தியமான உலக அழிவு சார்ந்த கோட்பாடுகளின் வழியாகவும் பார்க்கும் போதும் உலக முடிவு இதனால் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் நம்பும் 'டூம்ஸ்டே அச்சங்கள்' தான், அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

காஸ்மிக் தாக்கம் (Cosmic Impact ) :

காஸ்மிக் தாக்கம் (Cosmic Impact ) :

டைனோசர்களின் ஒட்டு மொத்த அழிவிற்க்கும் காரணம் என்று நம்பபடுவது காஸ்மிக் தாக்கம் தான்.

அழிவு :

அழிவு :

அதாவது, ஒரு வால்மீன் அல்லது சிறுகோளில் இருந்து வரும் அழிவுகரமான தாக்கமானது (catastrophic impact) பூமியை தாக்குவதின் மூலம் டூம்ஸ்டே நிகழலாம்.

சைபிரீய காட்டுப்பகுதி :

சைபிரீய காட்டுப்பகுதி :

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 20 மீட்டர் அதாவது 65 அடி அளவு விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் சைபிரீய காட்டுப்பகுதியின் அருகே தாக்கி உள்ளது என்று நம்பப்படுகிறது.

பயன்பாடு :

பயன்பாடு :

இதுபோன்ற காஸ்மிக் தாக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்படியான அதிநவீன தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 காமா கதிர் வெடிப்பு (Gamma Ray Brust) :

காமா கதிர் வெடிப்பு (Gamma Ray Brust) :

பிரபஞ்சம்த்திலேயே ஏற்படும் மோசமான வெடிப்புகளில் மிகவும் ஆபத்தான ஒன்று தான் - காமா கதிர் வெடிப்பு..!

 சமம் :

சமம் :

அந்த வெடிப்பு சக்தியானது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு வெளிக்கிடும் சக்திக்கு சமமாக இருக்கும்.

பயணித்து தாக்கும் :

பயணித்து தாக்கும் :

மேலும் அந்த வெடிப்பு சக்தியானது ஒரு மில்லி நொடியில் இருந்து 1 நிமிடம் அல்லது அதற்கு மேலான நேரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பயணித்து தாக்கும் வல்லமை கொண்டிருக்கும்.

உமிழும் பின்வீல் :

உமிழும் பின்வீல் :

இந்த கணக்கின் கீழ், பூமியில் இருந்து சுமார் 8000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் உமிழும் பின்வீல் (fiery pinwheel) ஒன்று, பூமியை நோக்கியும் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேதம் :

சேதம் :

கணிப்பின்படி உமிழும் பின்வீல் பூமியை தாக்கினால், அது உலகில் மாபெரும் சேதங்களை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தொற்று (Infection) :

தொற்று (Infection) :

தொற்று கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் மனித இனத்தை கொன்று குவித்த வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

கிருமிகள் :

கிருமிகள் :

பிளேக், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற கிருமிகள் ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை மனித இனத்தை நாசம் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆரம்பிக்கலாம் :

ஆரம்பிக்கலாம் :

அப்படியாக டூம்ஸ்டே எனப்படும் உலக அழிவானது, மனித இனத்தின் அழிவின் மூலம் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அணு ஆயுதப்போர் (Nuclear War) :

அணு ஆயுதப்போர் (Nuclear War) :

டூம்ஸ்டே நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி ஒரே நாளில் உலகம் அழியும் என்றால் அதை நிகழ்த்தக்கூடியது - அணு ஆயுதங்கள் தான்.

வளர்ச்சி :

வளர்ச்சி :

போர் விரும்பி உலக நாடுகளின் கடைசிகட்ட ஆயுதமான அணு ஆயுதங்களின் வளர்ச்சியானது மிகவும் அதீதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. (இந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..?!)

 அழிவு சக்தி :

அழிவு சக்தி :

தற்கால அதிநவீன தொழில்நுட்பமானது ஆக்க சக்தியை விட அழிவு சக்திக்கு தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு அணு ஆயுதங்கள் தான் சிறந்த எடுத்துக்காட்டு.

பிளாக் ஹோல்ஸ் (Black Holes) :

பிளாக் ஹோல்ஸ் (Black Holes) :

கண்ணுக்கு புலப்படாத அசாத்தியமான ஈர்ப்பு சக்தியை கொண்ட கருங்குழி எனப்படும் பிளாக் ஹோல்கள்..!

சிக்கி அழியும் :

சிக்கி அழியும் :

மறுபக்கம் என்ன என்று கூட தெரியாத அது போன்ற பிளாக் ஹோல்களில் பூமி கிரகம் சிக்கி அழியும் வாய்ப்பும் உண்டு. (பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையின் மர்மங்கள்..!)

சூப்பர் வல்கனோஸ் (Supervolcanoes) :

சூப்பர் வல்கனோஸ் (Supervolcanoes) :

நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத, இதுவரை வரலாற்றில் பதிவாகாத மிகப்பெரிய சீற்றங்களை உருவாக்க கூடிய சூப்பர் வல்கனோஸ் எனப்படும் எரிமலைகள்

பாதிப்பு :

பாதிப்பு :

உலகம் முழுக்க இருக்கும் அம்மாதிரியான எரிமலைகளின் வெடிப்பானது உலகத்தின் சுற்றுசூழலுக்கு சவால் விடக்கூடிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏலியன்கள் (Aliens) :

ஏலியன்கள் (Aliens) :

வேற்று கிரக வாசிகள் மூலமாகவும் உலக அழிவு ஏற்படலாம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர். (புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!)

ரோபோட்கள் (Robots) :

ரோபோட்கள் (Robots) :

இயந்திரங்களுக்கு அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு வழங்குவதின் மூலம் மனித இனம் அழியலாம் என்ற கருத்தும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!)

சூரியன் :

சூரியன் :

பூமி கிரகத்தின் வாழ்வாதாரத்தில் முக்கியமான ஒன்று சூரியன், ஆதே சூரியன் தான் உலகை ஒன்றுமே இல்லாமல் ஆக்கும் வல்லமை பெற்ற ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

அபாயகரமான சக்தி :

அபாயகரமான சக்தி :

சூரிய வெடிப்பு மற்றும் சூரிய புயல் என சூரியனின் அபாயகரமான சக்தி மூலம் டூம்ஸ்டே நிகழ்வது சாத்தியமே. (சூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி..!?)

ஸோம்பிஸ்(Zombies) :

ஸோம்பிஸ்(Zombies) :

ஸோம்பிஸ் என்றால் தன்னிலை மறந்து மிருகத் தனமாய் திரியும் ஒரு நிலையாகும்.

நிலை :

நிலை :

அப்படியான ஸோம்பி நிலையானது சாத்தியமே என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.

எறும்புகள் :

எறும்புகள் :

அதாவது, மூளையை கட்டுப்படுத்தும் சில ஒட்டுண்ணிகள் மூலம் எறும்புகள் ஸோம்பிஸ்களாக திரிவது உறுதியாகி உள்ளது.

ஒட்டுண்ணிகள் :

ஒட்டுண்ணிகள் :

ஆனால், மனித மூளையை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாள் :

கடைசி நாள் :

ஒருவேளை மனித மூளைகளை கட்டுக்குள் வைக்கும் ஒட்டுண்ணிகள் சாத்தியம் என்றால், ஸோம்பி என்ற நிலையும் சாத்தியம் தான். அதன் மூலம் கடைசி நாள் எனப்படும் டூம்ஸ்டே என்பதும் சாத்தியம் தான்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
உலக இருப்பின் கடைசி நாள் 'டூம்ஸ்டே'. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot