குற்றங்களில் இருந்து குடிமக்களை காப்பாற்றுமா - சைபர் ஸ்வட்சே கேந்திரா.?

By Siva
|

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருவது போலவே சைபர் க்ரைமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சைபர் குற்றங்களை தடுக்க இந்திய அரசு CERT என்பதன் மூலம் 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா என்ற அமைப்பை தொடங்கியுள்ளது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் மொபல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியை தொடரலாம்

குற்றங்களில் இருந்து குடிமக்களை காப்பாற்றுமா - சைபர் ஸ்வட்சே கேந்திரா?

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் அமைச்சர் ரவிசங்கர் அவர்கள் கூறியபோது, 'உலக நாடுகள் ஒன்றிணைந்து மால்வேர் க்ளினிங் சிஸ்டம் என்ற அமைப்பு மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான இண்டர்நெட்டை வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவும் இதில் இணைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 13 வங்கிகள் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளதால் எலக்ட்ரானின் பயன்பாடுகளை பாதுகாப்புடன் பயன்படுத்துவதில் நாம் மேம்பட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் முழுமையாக இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இண்டர்நெட் பாதுகாப்பை பெற்றுவிடும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

குற்றங்களில் இருந்து குடிமக்களை காப்பாற்றுமா - சைபர் ஸ்வட்சே கேந்திரா?

மத்திய அரசின் சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா என்ற அமைப்பு இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும், தொழிற்சாலைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை முதல்கட்ட ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.

தங்களுடைய கம்ப்யூட்டர்களில் இருந்து மால்வேர் எப்படி தாக்கும்? அதை எப்படி தவிர்ப்பது என்பதை பொதுமக்கள் முதலில் தெரிந்து கொள்ள இந்த அமைப்பு முதலில் செயல்படும்.

இதற்காக நேஷனல் சைபர் கோ-ஆர்டினேஷன் செண்டர் வரும் ஜூன் முதல் செயல்பட தொடங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் இதை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

மேலும் பத்துக்கும் மேற்பட்ட STQC என்று சொல்லக்கூடிய டெஸ்ட் செய்யும் செண்டர்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான கட்டணமும் ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சைபர் க்ரைம் தொழில்நுட்பத்தையும், தடயவியல் லேப்-ஐயும் பயன்படுத்தி நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் பிரசாத் தெளிவுபடுத்தியுள்ளார்

மேலும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் கம்ப்யூட்டரில் வெளிப்பொருட்களை பயன்படுத்தும்போது குறிப்பாக பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ், மற்றும் மற்ற யூஎஸ்பி பொருட்களை பயன்படுத்துவதை கூடியவரை குறைத்து கொள்ள வேண்டும் அல்லது பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும்

அதேபோல் ஆண்ட்ராய்டு போன்களின் பாதுகாப்பிற்காக இயங்கி வரும் M-Kavach என்ற டூலை அனைவரும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்

அதேபோல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு AppSamvid என்பதை பயன்படுத்தினால் மால்வேருடன் உள்ள எதையும் இது டவுன்லோடு செய்ய அனுமதிக்காது என்பதால் நம்முடைய கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்

கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 50,300 சம்பவங்கள் சைபர் செக்யூரிட்டி குறித்தே நிகழ்ந்துள்ளதால் இண்டர்நெட்டை பாதுகாப்புடன் பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம்

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் 44,679, 49,455 and 50,362 ஆகிய சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் CERT அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பிபி செளத்ரி கடந்த மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா' என்ற அமைப்பு மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் டெக்னாலஜி அமைப்பின் ஒரு பகுதி என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் காரணமாக இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ராவுடன் இணைந்து செயல்பட வேண்டிய சரியான நேரம் இதுவே என MeitY செயலாளர் அர்ஜூனா சுந்தர்ராஜன் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான மிக முக்கிய தேவைகளில் ஒன்று என டெல்லியை சேர்ந்த ஐடி செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ சகேத்மோடி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 50 மில்லியன் இண்டர்நெட் பயனாளிகள் மற்றும் 250 மில்லியன் மொபைல் இண்டர்நெட் பயனாளிகள் இருக்கும் மிகப்பெரிய இந்தியாவில் மத்திய அரசின் இந்த முயற்சி தகுந்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
At a time when cyber attacks are increasing, the government through its Computer Emergency Response Team (CERT-in) on Tuesday launched "Cyber Swachhta Kendra," a new desktop and mobile security solution for a secure cyber space in the country.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more