Home
News

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

நேற்றைய எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது.அவற்றின் அம்சங்கள் மற்றும் விலை ஆகியன குறித்து ஓர் பார்வை.

By Ilamparidi

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டிற்கான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாடானது நேற்று பார்சிலோனாவில் நடந்து முடிந்தது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனைப் போலவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தமது புதிய தயாரிப்புகளை பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிட்டன மற்றும் தமது அடுத்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல்,அவற்றின் வெளியீட்டு தேதி உள்ளிட்டவற்றினை வெளியிட்டன.
அத்தகைய எம்டபுள்யூ நிகழ்வில் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் வெளியிடப்பட்டன.

அவை கொண்டுள்ள அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் கீழே.

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்:

எம்டபுள்யூசி மாநாட்டில் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக்கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசியத் துவங்கியதிலிருந்தே அவை குறித்து பல வகையிலான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.மோட்டோவின் புதிய ஸ்மார்ட்போன்கள் இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்னவெல்லாம் தகவல் கசிந்து கொண்டிருந்த சூழலில் தான் நடைபெற்று முடிந்த எம்டபுள்யூசி மாநாட்டில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

மோட்டோ ஜி5 ஆனது 5 இன்ச் எச்டி டிஸ்பிளே(1080x1920 பிக்சல்ஸ்),ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட் ,1.4 ஜிஹெச்இசட் ஸ்னாப்ட்ராகன் 403 ப்ராசஸர்,2/3 ஜிபி ரேம்,16 ஜிபி/32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,128 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்,2800 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி,13 எம்பி பிடிஏஎப் மெயின் கேமரா,5 எம்பி முன்புற கேமரா,இரண்டு எல்இடி பிளாஷ் லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ் ஆனது 5.2 இன்ச் டிஸ்பிளே,3000 எம்ஏஎச் பாட்டரி,ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட்,டர்போ பவர் குயிக் சார்ஜிங் சப்போர்ட்,டூயல் ஆட்டோ போகஸ் 12 எம்பி மெயின் கேமரா,2 எச்ஜிஇசட் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டா கோர் ப்ரோசஸர்,2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் வசதியுடன்,32/64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,128 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்,4கே வீடியோ ரெக்கார்டர்,டூயல் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

நிறம்:

நிறம்:

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகியன லூனார் கிரே,பைன் கோல்ட் மற்றும் சஃபைர் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:

விலை:

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகியவற்றின் விலையைப் பொறுத்தமட்டில் மோட்டோ ஜி 5 ஆனது ரூபாய் 14,000 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ரூபாய் 19,500 க்கு விற்பனையாகும்.இவை இந்தியாவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 3310 (விலை, அம்சங்கள்).!

Best Mobiles in India

English summary
Moto G5, G5 Plus Launched at MWC 2017; Coming to India in March.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X