ஸ்மார்ட்போனை 5 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும், எப்படி என்று பாருங்கள்

Written By:

தினமும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது, பல புதிய தொழில்நுட்பங்களும் வெளியாகிட்டு தான் இருக்கின்றது. சந்தையில் அளவுக்கு அதிகமாக புதிய ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்திருப்பதும் மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் எல்லா வகை விலை பட்டியலிலும் கிடைப்பது அதன் விற்பனையை அதிகரிச்சிருக்கு என்றே சொல்லலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட்போனை 5 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும், உண்மையாகவே முடியும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அந்த வகையில் இன்னைக்கு பெரும்பாலானவங்க கையில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இல்லை. இப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கையில் சார்ஜருடன் தான் இருக்கின்றனர். இதற்கு விடிவு காலம் பிறந்தாச்சுங்க. இந்த புதிய போர்டபிள் சார்ஜர் அந்த கவலையை போக்கிடும். காமெடி படங்கள்

இனி உங்க ஸ்மார்ட் போனை 5 நிமிடத்தில் 100% சார்ஜ் செய்ய முடியும். ப்ரோன்டோ போர்டபிள் பேட்டரி மூலம் ஐபோன் 5 போனுக்கு 5 நிமிடத்தில் முழுமமையாக சார்ஜ் செய்ய முடியும் என்பதோடு ஒரு மணி நேரத்தில் 9 கருவிகளுக்கும் சார்ஜ் செய்ய முடியும். ப்ரோன்டோ என்பது லத்தீன் வார்த்தையாகும் இதற்கு மின்னல் மற்றும் வேகம் என பொருள்படும்.

இந்த ப்ரோன்டோ இரு மாடல்களில் கிடைக்கும் ப்ரோன்டோ 5 மற்றும் ப்ரோன்டோ 12. ப்ரோன்டோ 5 மூலம் 4500 எம்ஏஎஹ் பேட்டரியையும் ப்ரோன்டோ 12 மூலம் 13,500 எம்ஏஎஹ வரை பயன்படுத்தலாம். இரு மாடல்களுமே அளுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதோடு நைலான் ஸ்ட்ராப் மற்றும் சார்ஜ் ஆகும் போது எல்ஈடி இன்டிகேட்டர் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ப்ரோன்டோ 5 மற்றும் ப்ரோன்டோ 12 மாடல்களிலும் யுஎஸ்பி 2.0 உள்ளது.

English summary
Charge Your Mobile Devices in Just 5 Minutes. Pronto a new device to charge your mobile devices quickly as soon as 5 minutes.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot