பின்வாங்கிய பிஎஸ்என்எல்: மார்ச் 31, 2018 வரை பிபி249 திட்டம் நீட்டிப்பு.!

சமீபத்தில் அதன் பிரபலமான பட்ஜெட் திட்டங்களின் நன்மைகளை குறைப்பதாக அறிவித்திருந்தது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து தற்போது இந்த சேவை நீட்டிப்பு நடவடிக்கையை நிகழ்த்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

|

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL - Bharat Sanchar Nigam Limited) அதன் நுழைவு நிலை திட்டமான பிபி249 பிராட்பேண்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற மார்ச் 31, 2018 வரை அனைத்து வட்டங்களிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

பின்வாங்கிய பிஎஸ்என்எல்: மார்ச் 31, 2018 வரை பிபி249 திட்டம் நீட்டிப்ப

மூலம் : டெலிகாம்டால்க்.இன்ஃபோ

சமீபத்தில் அதன் பிரபலமான பட்ஜெட் திட்டங்களின் நன்மைகளை குறைப்பதாக அறிவித்திருந்தது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து தற்போது இந்த சேவை நீட்டிப்பு நடவடிக்கையை நிகழ்த்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. நுழைவு நிலை திட்டமான பிபி249-ல் ஏற்படுத்தப்பட்டுள்ள நீட்டிப்பு என்ன.? இதன் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

இந்தியாவிலுள்ள அனைத்து வட்டங்களுக்கும் செல்லுபடியாகும்

இந்தியாவிலுள்ள அனைத்து வட்டங்களுக்கும் செல்லுபடியாகும்

இந்த பிபி249 திட்டமானது ஜம்மு & காஷ்மீர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய வட்டாரங்களில் தவிர இந்தியாவிலுள்ள அனைத்து வட்டங்களுக்கும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வாடிக்கையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய காலக்கெடு தேதி வரை பிபி249 திட்டத்தில் சேரலாம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ்

அடுத்த ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ்

இந்த பிபி249 பிராட்பேண்ட் திட்டமானது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்றும் திட்டத்தின் செல்லுபடியாகும் தேதியானது பதிவு செய்யப்பட்ட தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய திறந்து வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு பின்னர் சந்தாதாரர்கள் பிபிஜி யூஎல்டி 499 திட்டத்தின் சேவைக்கு தானாகவே மாற்றியமைக்கப்படுவர், அந்த திட்டமானது பிபி249 திட்டத்தைவிட சற்று சிறந்த நன்மைகளை வழங்கும்.

5ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது

5ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது

பிபி249 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், இது 8 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்துடன் 5ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது மற்றும் அந்த வரம்பை மீறிய பின்னர் அதாவது 5ஜிபிக்கு பின்னர் இணைய வேகமானது 1 எம்பிபிஎஸ் என்று குறையும்.

பிராட்பேண்ட் விளம்பரத்திட்டம்

பிராட்பேண்ட் விளம்பரத்திட்டம்

முன்னதாக, இதே பிபி249 திட்டமானது 2 எம்பிபிஎஸ் வேகத்திலான 1ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கி வந்தது. பின்னர் திருத்தங்கள் செய்யப்பட்டு 5ஜிபி டேட்டா வழங்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. வரம்பிற்கு பின்பும் டேட்டா வழங்கும் நோக்கத்தில், பிஎஸ்என்எல் தொகுத்து வழங்கும் பிராட்பேண்ட் விளம்பரத்திட்டங்களில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

இலவச குரல் அழைப்பு

இலவச குரல் அழைப்பு

தரவு நன்மைகளுடன் இந்த பிபி249 திட்டமானது இந்தியாவில் எந்தவொரு வலைப்பின்னலுக்கும் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக அனுபவிக்கலாம்.

கால வரம்பும் இல்லாமல் குரல் அழைப்பு

கால வரம்பும் இல்லாமல் குரல் அழைப்பு

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவொரு கால வரம்பும் இல்லாமல் குரல் அழைப்புகளை நாள் முழுவதுமாக முற்றிலும் இலவசமக அனுபவிக்கலாம். பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் இலவச இரவு நேர குரல் அழைப்பு நேரங்களைப் திருத்தியமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஆறு மாதங்களுக்கு

முதல் ஆறு மாதங்களுக்கு

மேற்க்குறிப்பிட்டபடி, ரீசார்ஜ் செய்யும் முதல் ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும், அதாவது முதல் ஆறு மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ.249/- செலுத்த வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு பிபிஎன்எல் திட்டமான பிபிஜி கோம்போ யூஎல்டி 499 பிராட்பேண்ட் திட்டத்திற்கு பிபி249 திட்ட பயனர்கள் நகர்த்தப்படுவார்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Extends the Validity of Entry-Level BB249 Broadband Plan Across All Circles Till March 31, 2018. Read mobre about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X