ரூ.429, ரூ.485/-ல் நன்மைகள் குறைப்பு; அழிவை நோக்கி பயணிக்கும் பிஎஸ்என்எல்.?

|

தொலைதொடர்பு சந்தையில் அதன் தைரியமான நகர்வுகளுக்கு அறியப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் - அதன் எஸ்டி. 485 மற்றும் எஸ்டிவி 429 ஆகியவற்றின் செல்லுபடியை குறைப்பதன் மேலுமொரு தைரியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரூ.429, ரூ.485/-ல் நன்மைகள் குறைப்பு; அழிவை நோக்கி பிஎஸ்என்எல்.?

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் டிஜிட்டல் இந்தியா 429 திட்டத்தின் செல்லுபடியை குறைத்ததோடு அதன் 485 திட்டத்தின் செல்லுபடியையும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன.? தற்போதைய நன்மைகள் என்ன.?

ரூ.429 மற்றும் ரூ.485

ரூ.429 மற்றும் ரூ.485

கடந்த காலங்களில் ரூ.429 மற்றும் ரூ.485 என்கிற இரண்டு திட்டங்களும் மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த இரண்டு திட்டங்களையும் பிஎஸ்என்எல் மறுசீரமைத்தபின்னர் அவைகள் முறையே 71 நாட்கள் 74 நாட்களுக்கும் செல்லுபடியாகிறது.

ஜனவரி 4 ஆம் தேதி

ஜனவரி 4 ஆம் தேதி

"இந்த இரண்டு திட்டங்களும் கிடைக்கின்ற வட்டாரங்களில், வருகிற ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளது" என்று பிஎஸ்என்எல் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற பிரபலமான வட்டாரங்களில் இந்த திட்டங்கள் கிடைக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 1 ஜிபி

ஒரு நாளைக்கு 1 ஜிபி

இந்த கட்டண திட்டங்களின்கீழ் வழங்கப்படும் நன்மைகள் பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் டிஜிட்டல் இந்தியாவின் திட்டமான 429 ஆனது இப்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை வழங்குகிறது உடன்வ வீட்டு வட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்டிடி நன்மைகளை வழங்குகிறது.

மொத்தம் 71 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 71 நாட்களுக்கு செல்லுபடி

துரதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டம் எந்தவொரு இலவச ரோமிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைங்களையும் வழங்குவதில்லை. இந்திய சேவைகள் நிலையான கட்டண விகிதத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். இந்த சலுகையானது ரீசார்ஜ் செய்த தேதி முதல் மொத்தம் 71 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் 485 ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா, ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஆனால் இதன் அழைப்பு நன்மைகள் ஆனது மும்பை மற்றும் தில்லி தவிர இதர வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மொத்தம் 74 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 74 நாட்களுக்கு செல்லுபடி

இந்த ரூ.485 திட்டமானது, மேற்கண்ட ரூ.429 போன்றே எந்தவிதமான எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது. இந்த சலுகையானது ரீசார்ஜ் செய்த தேதி முதல் மொத்தம் 74 நாட்களுக்கு செல்லுபடியாகும். முன்னர் இதே திட்டமானது மொத்தம் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாத காலத்திற்குள் மீண்டும்

ஒரு மாத காலத்திற்குள் மீண்டும்

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியன்று தான், இந்த இரண்டு திட்டங்களின் செல்லுபடியானதும் 90 நாட்களில் இருந்து 84 நாட்களாக குறைத்து அறிவிக்கப்பட்டதும், தற்போது ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் இந்த திட்டங்களின் செல்லுபடி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வகையில் மக்களை ஈர்க்கும் என்பது புரியவில்லை.

எவ்வகையில் மக்களை ஈர்க்கும் என்பது புரியவில்லை.

தனியார் தொலைதொடர்பு இயக்குநர்கள் அதிக செல்லுபடியாகும் திட்டங்களை அறிவிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் தற்போதைய திட்டங்களின் செல்லுபடியை குறைத்து வருவது எவ்வகையில் மக்களை ஈர்க்கும் என்பது புரியவில்லை.

இரண்டாவது பெரிய மாற்றம்

இரண்டாவது பெரிய மாற்றம்

இதுபோன்ற பிஎஸ்என்எல் நடவடிக்கைகளொன்றும் புதிதல்ல. பல்வேறு காலகட்டங்களில் கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் பிரபலமான திட்டங்களின் செல்லுபடி காலம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட இந்த நடவடிக்கை பிஎஸ்என்எல்-ன் இரண்டாவது பெரிய மாற்றமாகும்.

பிராட்பேண்ட் இரவு அழைப்பு நன்மை

பிராட்பேண்ட் இரவு அழைப்பு நன்மை

ஒரு சில நாட்களுக்கு முன்னர், அரசுக்கு சொந்தமான இந்த பொதுத்துறை நிறுவனம், அதன் பிராட்பேண்ட் இரவு அழைப்பு நன்மைகளை திருத்தியது. அந்த திருத்தத்தின் கீழ், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 10.30 முதல் காலை 6 மணி வரை என்ற வரம்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Reduces the Validity of STV 485 and STV 429 Plans from 84 Days to 74 and 71 Days Respectively. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X