455 நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் 455நாட்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஒரு வருடத்திற்கான திட்டம் (ரூ.1699)என்றாலும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு கூடுதலாக 90நாட்கள் வேலிடிட்டியை வழங்கி 455நாட்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி இருக்கிறது பிஎஸ்என்எல்.

ரூ.1699 ரீசார்ஜ்
அதன்படி பயனர்கள் ரூ.1699ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு வேலிடிட்டி முடியும் வரை 100 மெசேஜ்கள்அனுப்பிக் கொள்ளலாம்.

ரிங் பேக் டோன்
அதன்பின்பு 365நாட்களுக்கு ரிங் பேக் டோன் அல்லது காலர் ட்யூன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது இந்த அருமையான ரிசார்ஜ் திட்டம். பின்பு இந்த மாதத்தின் துவகத்தில் இருந்து விழாக்கள் அதிகப்படியாக கொண்டாடப்பட்டு வருவதால் பயனர்களுக்கு கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை இந்த மாதம் முழுவதும் பிஎஸ்என்எல் வழங்கிவருகிறது. அதேபோல் அடுத்த மாதமும் அதற்கடுத்த மாதமும் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது எனத் தகவல் தெரிவிக்க்பபட்டுள்ளது.
கூகுள் பே-வை தூக்கிசாப்பிடும் சியோமி மி பே டிஜிட்டல் பேமெண்ட்: இப்போது அனைவருக்கும்!

அன்மையில் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டிகொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். அந்த திட்டங்களின் சலுகைகளைப் பார்ப்போம்.

ரூ.222-ப்ரீபெய்ட்
ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.222-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல்அழைப்புகள், 1000 ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 28நாட்களுக்கு வழங்குகிறது.இதனுடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

ரூ.333-ப்ரீபெய்ட்
அடுத்து ஜியோவின் ரூ.333-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 56நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

ரூ.444-ப்ரீபெய்ட்
ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

ரூ.555-ப்ரீபெய்ட்
ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், 3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications