Home
Apps

சியோமி மி பே டிஜிட்டல் பேமெண்ட் வசதி: இப்போது அனைவருக்கும்!

சியோமி நிறுவனம் தனது, சியோமி மி பே (Xiaomi Mi Pay) பயன்பாட்டு செயலியைக் கூகுள் கூகுள் பிளே ஸ்டோரில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் படி வெளியிட்டுள்ளது. கூகுள் பே, பேடியம் போன்ற டிஜிட்டல் வாலெட்களை போன்று ஆண்ட்ராய்டு பயனர்கள் இன்று முதல் சியோமி மி பே சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெகு வேகமா வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட்

வெகு வேகமா வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் பேமெண்ட் முறை இந்தியாவில் வெகு வேகமா வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் துறை அனைத்து நிறுவனங்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கூகுள் பே, அமேசான் பே, ஏர்டெல் பே, போன்பே போன்று அனைத்து நிறுவனங்களும் இத்துறையில் கால்பதித்துள்ளது.

சியோமி மி பே

சியோமி மி பே

இந்நிலையில் தற்பொழுது சியோமி நிறுவனமும் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் கால் பதிக்க முடிவு செய்து, தற்பொழுது சியோமி மி பே அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் தனது செயலியை வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் சியோமி மி பே

கூகுள் பிளே ஸ்டோரில் சியோமி மி பே

குறிப்பாக வாட்ஸ்ஆப் பேமண்ட் முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, சியோமி தனது பேமெண்ட் சேவையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சியோமி ஆப் ஸ்டோரில் மட்டுமே பயனர்களுக்குக் கிடைத்து வந்த சியோமி மி பே பயன்பாட்டுச் செயலி தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைக்கிறது.

சியோமி மி பே சேவைகள்

சியோமி மி பே சேவைகள்

சியோமி மி பே சேவையில் UPI முறைப்படி பணம் செலுத்துதல், QR ஸ்கேனிங் முறை, நண்பர்களிடம் பணம் கேட்பதற்கான ரெக்வஸ்ட்டிங் ஆப்ஷன், உங்கள் ஒட்டுமொத்த பயன்பாடு பில்லிங் சேவை, எலக்ட்ரிக் பில், மொபைல் பில், போன் ரீசார்ஜ், கேஸ் பில், தண்ணீர் பில், DTH ரீசார்ஜ், பிராட்பேண்ட் பில்லிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் போன்று அனைத்து சேவைகளையும் களமிறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pay App Available on Google Play Store-Now : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X