பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்.! காரணம் இதுதான்!.

|

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கிய சேது ஆப் பயன்பாட்டையும் இந்திய அரசாங்கத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டியுள்ளார்.

கோவிட்-19 வைரஸ்

குறிப்பாக நாட்டில் கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கண்காணிக்கும் மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதற்கான உதவிக்குறிப்புகளைகொடுக்கும் இந்த ஆப் பயன்பாடு இந்த மாத தொடக்ககத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் ஆகிய இரண்டிற்கும்வெளியானது. இந்த ஆப் ஏற்கனவே 60மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டிவிட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

எதிர்த்து

மேலும் கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் டிஜிட்டல் திறன்களை பயன்படுத்துவதையும் மற்றும் இந்த வைரஸின் பாதிப்பினை கண்டறியவும் ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியதையும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று பில்கேட்ஸ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Xiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர் 1S அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

எழுதிய கடிதத்தில், மோடியின்

மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மோடியின் தலைமையையும், தொற்றுநோயை சிறப்பாகச் சமாளிக்க நாடு மேற்கொண்டுள்ள அனைத்து செயல்களுக்கும், நடவடிநடவடிக்கைகளையும் பாராட்டி உள்ளார்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில்

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஜொமாடோ மற்றும் அர்பன் கம்பெனி போன்ற பல நிறுவனங்கள் தங்கள் கூட்டாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த வேலை செய்யும் போது ஆரோக்ய சேது செயலியை இயக்கி இருப்பதை கட்டாயமாக்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.

1075 என்ற எண்ணை

இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால்அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து
உதவியை பெற வேண்டும்.

இந்த செயலியில் கொரோனா ஆப்

அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும்.
இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தும் வழிமுறைகள்

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தும் வழிமுறைகள்

1.ஆரோக்கிய சேது செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்தபின்பு, அதில் கேட்கப்பட்டபடி, உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை அணுக அனுமதிக்கவும்.

2.பின்னர் நீங்கள் ஒரு OTP ஐப் பெறுவீர்கள், அதை உள்ளிட்டு இந்த செயலியை செயல்படுத்த வேண்டும்.

3.அடுத்து இந்த செயலியில் கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து உங்கள் பாலினத்தைத் தேர்வுசெய்க

4.இந்த செயலியில் கேட்டபடி உங்கள் முழு பெயரையும், பின்னர் வயதையும், பின்னர் தொழிலையும் உள்ளிடவும்

5. கடந்த 30 நாட்களில் உங்கள் வெளிநாட்டு பயண வரலாறு குறித்து உங்களிடம் கேட்கப்படும். தகுந்த பதிலைக் கொடுங்கள். உங்கள் வெளிநாட்டு பயண வரலாறு, ஏதேனும் இருந்தால், இருப்பவர்களுடன் பொருந்தும்

Best Mobiles in India

English summary
Bill Gates Praised India’s Covid-19 Tracker Aarogya Setu App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X