Xiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர் 1S அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம் மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் சியோமியின் Mi எக்கோஸிஸ்டெம் தயாரிப்புகளின் கீழ் உள்ள அமைப்பில் சேரும் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் இதுபோன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாம் அதிகமாகக் காணவில்லை என்றாலும் கூட, இவை வழக்கமான பெட்ரோலால் இயக்கப்படும் ஸ்கூட்டர்களைப் போலப் பெரிதாக இல்லாமல் அடக்கமாக இருக்கிறது. இந்தியாவில், இந்த வகையான வாகனம் பெரியளவில் இல்லை என்றாலும் உலகின் பிற பகுதிகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.

மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் மாடல்

மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் மாடல்

சியோமி நிறுவனம் சீன சந்தையில் சில காலமாக காம்பாக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவரிசையில், இப்போது சியோமி நிறுவனம் இந்த மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தற்போது சீனாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல், பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள் மூலம் சர்வதேச அளவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!

புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் அம்சங்கள்

புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் அம்சங்கள்

Mijia ஸ்கூட்டர் 1S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாடு நேரம் சுமார் 3,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டுள்ளது என்று என்று Gizmochina கூறியுள்ளது. இதில் உள்ள DC மோட்டார் உதவியுடன் ஒரு முழு சார்ஜ்ஜிற்கு சுமார் 30km தூரம் வரை 25 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏபிஎஸ் (ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 12.5 கிலோ மற்றும் 100 கிலோ வரை எடையைச் சுமக்கக் கூடியது.

சிரிய காட்சி டிஸ்பிளே

சிரிய காட்சி டிஸ்பிளே

புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் ஸ்கூட்டரில் கூடுதலாக பவர் சேவிங் மோடு, நார்மல் மோடு மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு முறைகள் உள்ளன. டாஷ்போர்டாக செயல்பட மேலே ஒரு சிரிய காட்சி டிஸ்பிளேயையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

சிறிய அளவு மற்றும் மடிக்கக்கூடிய டிசைன்

சிறிய அளவு மற்றும் மடிக்கக்கூடிய டிசைன்

இந்த டிஸ்பிளே ஸ்கூட்டரின் வேகம், பேட்டரி அளவு மற்றும் ஸ்கூட்டரில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இன்ஃபிலேட்டப்பில் டயர்கள் மற்றும் ஸ்கூட்டரின் வடிவமைப்பு விமானம் தர அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.சிறிய அளவு மற்றும் மடிக்கக்கூடிய டிசைன், இந்த ஸ்கூட்டரை குறுகிய தூர பயணத்திற்கும், அருகிலுள்ள விரைவான ஓட்டங்களுக்கும் ஏற்றதாக மாற்றியுள்ளது.

இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை

இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை

சீனாவின் சில இ-காமர்ஸ் தளங்களில் இந்த மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறது, இருப்பினும் இந்தியாவில் இந்த தயாரிப்பு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. ஆனால், விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!

மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

சியோமி இந்த சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்பதை உறுதியாகச் சொல்லக் காரணம் இருக்கிறது. சியோமி அண்மையில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட தனித்துவமான ரோபோ வேக்கம் கிளீனரை இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 17,999 க்கு அறிமுகம் செய்தது. அதேபோல் இந்த மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் மாடலை இந்தியச் சந்தையில் வெறும் ரூ.21,700 என்ற விலையில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Scooter 1S With ABS System Launched In China Know The Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X