Home
News

மிரட்டிய வாடிக்கையாளர்கள்; பணிந்தது ஏர்டெல்; பின்னணியில் நடந்தது என்ன.?

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெயிட் திட்டங்களுக்கான மிகப்பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது

By Muthuraj

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெயிட் திட்டங்களுக்கான மிகப்பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. மாற்றம் என்ற உடனேயே, கூடுதல் டேட்டா அல்லது குறிப்பிட்ட ப்ரீபெயிட் திட்டம் மீதான அதிரடி கட்டண திருத்தம் என்று நினைத்து விட வேண்டாம்.

மிரட்டிய வாடிக்கையாளர்கள்; பணிந்தது ஏர்டெல்; பின்னணியில் நடந்தது என்ன?

அதெல்லாம் வழக்கமான ஒன்று தான். இம்முறை ஏர்டெல் நிகழ்த்தியுள்ள மாற்றமானது சற்று வித்தியாசமானது மற்றும் மிகவும் போட்டித்தன்மை மிக்க ஒரு மாற்றமாகும். அது என்ன மாற்றம்.? அந்த மாற்றம் எந்தெந்த திட்டங்களில் கிடைக்கும்.? இந்த மாற்றத்தின் விளைவாக உண்டாகப்போகும் போட்டி என்ன.? அந்த போய்டியில் ஜியோவை தவிர்த்து வேறு யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்.? என்பதையெல்லாம் பற்றி விரிவாக காண்போம்.

"இதுதான் டா உண்மையான அன்லிமிடெட் டேட்டா.!"

சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம், அதன் ப்ரீபெயிட் திட்டங்களின் டேட்டா நன்மை முடிந்த பின்னர் கிடைக்கும் வரம்பற்ற டேட்டாவின் வேகத்தை 128 Kbps என்று அதிகரித்துள்ளது. "இதுதான் டா உண்மையான அன்லிமிடெட் டேட்டா" என்ற பூரிப்பை ஏற்படுத்தும் இதே வேகத்தை, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மறைமுகமான உண்மை.?!

மறைமுகமான உண்மை.?!

இந்த சமீபத்திய நடவடிக்கை மூலம் ஏர்டெல் அந்த குழுவில் இணைந்துள்ளது. போட்டித்தன்மை மிக்கது என்கிற பக்கத்தை தவிர்த்து, மறுபக்கத்தை பார்த்தால், இந்த நடவடிக்கையானது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகவும் தேவையானதொரு மாற்றமாகும். ஏனெனில் பல பயனர்கள் ஏர்டெல் சேவையை விட்டு வெளியேற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த பீதியிலேயே தான் இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது மறைமுகமான உண்மை.

பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.!

பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.!

உதாரணமாக, ஏர்டெல் ரூ.199/- கட்டணத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. தினசரி வரம்பான 1.4 ஜிபி தீர்ந்த பின்னர், அடுத்த நாளுக்கான 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை பெற, நள்ளிரவு 12 மணி வரை காத்திருக்க வேண்டும். இதற்கிடையில் கிடைக்கும் டேட்டாவின் வேகம் தான் தற்போது 128 Kbps இஎன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம், ஏர்டெல் அதன் உண்மையான வரம்பற்ற டேட்டாவை வழங்குவதோடு சேர்த்து, பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை.!

ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை.!

128 Kbps என்பது அதிவேக தரவு அல்ல, இருந்தாலும் கூட, அது வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப மற்றும் படிக்க போதுமானதாக இருக்கும். அதாவது ஆன்லைனில் இருப்பது மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு நபரின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இந்த அன்லிமிடெட் பாணியை ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை, ரிலையன்ஸ் ஜியோ தான். தினசரி டேட்டா நன்மையை அறிமுகம் செய்த கையோடு, வரம்பிற்கு பின்னரும் கூட டேட்டா நன்மைகள் கிடைக்கும், ஆனால் அதன் வேகத்தில் மாற்றங்கள் இருக்கும் என்றும் அறிவித்தது.

128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் என்னென்ன.?

128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் என்னென்ன.?

ஜியோ அதன் அறிமுகத்தின் போது, வரம்பிற்கு பின்னர் 128 Kbps வேகத்தை வழங்கியதும், தற்போது 64 Kbps என்கிற வேகத்தை வழங்குவதும், மறுகையில் உள்ள பிஎஸ்என்எல், 128 Kbps வழங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பற்ற ப்ரீபெயிட் காம்போ ரீசார்ஜ்களான - ரூ.199, ரூ.249, ரூ.349, ரூ.399, ரூ.448, ரூ.499, ரூ.509 மற்றும் அதற்கு மேலானவைகள் தான் நிறுவனத்தின் 128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் ஆகும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில்.?

வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில்.?

ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் உண்டான கட்டண யுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டு மற்ற டெலிகாம்களும், இந்த 128 Kbps மாற்றத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த விஷயத்தை பொறுத்தவரை வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில், இந்நிறுவனங்களுக்கு இணைப்புக்கு தேவையான அத்தியாவ அத்தியாவசிய ஒப்புதல்கள் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Now Providing 128 Kbps After FUP Speed With its Prepaid Plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X