எழுதி வச்சிக்கோங்க, இந்த வோடபோன் பிளானை ஏர்டெல் & ஜியோ காப்பி அடிக்கும்.!

இந்த 2 திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிறுவனத்தின் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும்.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை சமாளிக்கும் வண்ணம், வோடபோன் இந்தியா இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று வோடபோன் ரூ.569/- ப்ரீபெய்ட் திட்டமாகும். இது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மற்றொன்று ரூ.511/- திட்டமாகும். இது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

எழுதி வச்சிக்கோங்க, இந்த வோடபோன் பிளானை ஜியோ காப்பி அடிக்கும்.!

இந்த 2 திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிறுவனத்தின் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்கமே ரீசார்ஜ் செய்த தேதி முதல் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டங்கள் இப்போது சில வட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அனைத்து வட்டாரங்களிலும் எப்போது அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை.

3.5 ஜிபி தரவு மற்றும் 1.4 ஜிபி தரவு.!

3.5 ஜிபி தரவு மற்றும் 1.4 ஜிபி தரவு.!

இந்த புதிய திட்டங்களின் வருகையால் நிறுவனத்தின் ரூ.549 மற்றும் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டங்கள் திரும்பி பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் முறையே 28 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவு மற்றும் 1.4 ஜிபி தரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் இரண்டும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தரவு நன்மைகளுடன் சேர்ந்து 100 எஸ்எம்எஸ் என்கிற நன்மையையும் வழங்குகின்றன.

தினசரி வரம்பற்ற குரல் அழைப்பு.!

தினசரி வரம்பற்ற குரல் அழைப்பு.!

இன்னும் விரிவாக கூறவேண்டுமென்றால், வோடபோன் நிறுவனத்தின் அனைத்து புதிய ரூ.569/- திட்டமானது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் தினசரி வரம்பற்ற குரல் அழைப்புகளை, வாராந்திர வரம்பின் கீழ் வழங்குகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

மறுகையில் உள்ள ரூ.511/- திட்டமானது, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் தினசரி வரம்பற்ற குரல் அழைப்புகளை, வாராந்திர வரம்பின் கீழ் வழங்குகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ரீசார்ஜ் தேதி முதல் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். குரல் அழைப்புகளின் நாள் வரம்பை பொறுத்தவரை 250 நிமிடங்கள் ஆகும் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் ஆகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஜியோ பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

ஜியோ பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

நாட்டில் வேறு எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவுத் திட்டத்தை வழங்கவில்லை. அதாவது இது வோடபோனில் இருந்து முதன்முதலாக தொடங்கும் ஒரு பணியாகும். இதை ஏர்டெல் மற்றும் ஜியோ பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ ஆனது அதன் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை 84 நாட்களுக்கும், அதன் ரூ.498/-ன் கீழ் 91 நாட்களுக்கும் வழங்கி வருகிறது.

ஒரு நாளைக்கு 3.5 ஜிபி மற்றும்  1.4 ஜிபி.!

ஒரு நாளைக்கு 3.5 ஜிபி மற்றும் 1.4 ஜிபி.!

மொத்தத்தில், வோடபோன் ரூ.569/- ஆனது 252 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்க மறுகையில் உள்ள ரூ.511/- ஆனது 168 ஜிபி அளவிலான டேட்டாவை 84 நாட்களுக்குள் வழங்குகிறது. ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைத்த வோடபோன் ரூ.549 மற்றும் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது தற்போது ஒரு நாளைக்கு 3.5 ஜிபி மற்றும் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி தரவு நன்மையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches Rs 569, Rs 511 Prepaid Plans With 3GB and 2GB Daily Data for 84 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X