ஆப்பிள் அப் ஸ்டோர் : ஒவ்வொரு நொடியிலும் 800 டவுன்லோட்ஸ்..!

Written By:

ஆப்பிள் அப் ஸ்டோர் : ஒவ்வொரு நொடியிலும் 800 டவுன்லோட்ஸ்..!

இன்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இதன் பிரத்யோக அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யும் அப் ஸ்டோர் 45 பில்லியன் டவுன்லோட்களை கடந்துவிட்டதாம்....இதில் அப்டேட்ஸ் மற்றும் ஒருவர் இரண்டு அல்லது அதற்கும் மேல டவுன்லோட் செய்தவைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லையாம். ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 40 பில்லியன் தரவிக்கங்களை கடத்தது நினைவிருக்கலாம்.

மூன்றே மாதங்களில் 5 பில்லியன் மென்பொருள்கள் டவுன்லோட் செய்திருக்கிறார்கள் உலகம் முழுவதுமுள்ள ஆப்பிள் ரசிகர்கள். இதன் மூலமாக ஆப்பிள் அப்ளிகேசன்களை வடிவமைப்பவர்கள் $9 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

மேலும் இந்த அப் ஸ்டோரிலிருந்து ஒவ்வொரு வினாடிக்கும் சராசரியாக 800 மென்பொருள்கள் தரவிறக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் அப் ஸ்டோர் ஆனது 119 நாடுகளில் இணையம் வழியாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot