ஆண்ட்ராய்டு போன் விலையில் புது Apple iPad அறிமுகம்.. 28.6Whr பேட்டரி, 10.9-இன்ச் டிஸ்பிளே, 12MP கேமரா!
ஆப்பிள் (Apple) நிறுவனம் எம்3 சிப்செட் உடன் அதன் புதிய 7த் ஜென் ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்த கையோடு, ஒரு புதிய பேஸ் ஐபேட் (Base iPad) மாடலையும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் மலிவான விலைக்கு வருகிறது; இன்னும் சொல்லப்போனால் ஆண்ட்ராய்டு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஆப்பிள் நிறுவனம் ஏ16 சிப் உடனான ஐபேட் (iPad with A16 Chip) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 10.9-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது எம் சீரிஸ் சிப்-ஐ தவிர்த்து, ஆப்பிளின் பழைய 16 சிப்பை பேக் செய்கிறது. இந்த சிப் 4 ஜிபியு கோர்கள் மற்றும் 16 நியூரல் என்ஜின் கோர்கள் கொண்ட 5 கோர் சிபியு ஆகும்.

ஐபேட் 18 ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடல் ஆனது 3 சேமிப்பக வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக, பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இது ஐபாட் ஏர் மாடலில் உள்ளதை போலவே, பின்புறத்தில் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது
பேட்டரியை பொறுத்தவரை இது 28.6Whr பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது வைஃபையின் கீழ் 10 மணிநேர பரவுஸிங் பேட்டரி லைஃப்-ஐ உறுதியளிக்கிறது. கூடவே இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோஃபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் டச் ஐடி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடலானது 480 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது மற்றும் இது 7 மிமீ தடிமனை கொண்டுள்ளது.
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் விலை:
128 ஜிபி - ரூ.34,900
256 ஜிபி - ரூ.44,900
512 ஜிபி - ரூ.64,900
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் விலை:
128 ஜிபி - ரூ.49,900
256 ஜிபி - ரூ.59,900
512 ஜிபி - ரூ.79,900
இது பிங்க், சில்வர், யெல்லோ மற்றும் ப்ளூ என மொத்தம் 4 கலர்களில் வாங்க கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஐபேட்க்கான ஸ்மார்ட் ஃபோலியோ (Smart Folio) மற்றும் மேஜிக் கீபோர்ட் ஃபோலியோ (Magic Keyboard Folio) ஆகியவற்றை முறையே ரூ.8,500 மற்றும் ரூ.24,900 க்கு வாங்கலாம். இது அனைத்துமே பிராண்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.59,900
256 ஜிபி - ரூ.69,900
512 ஜிபி - ரூ.89,900
1 டிபி - ரூ.1,09,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.74,900
256 ஜிபி - ரூ.84,900
512 ஜிபி - ரூ.1,04,900
1டிபி - ரூ.1,24,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.79,900
256 ஜிபி - ரூ.89,900
512 ஜிபி - ரூ.1,09,900
1டிபி - ரூ.1,29,900
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்:
128 ஜிபி - ரூ.94,900
256 ஜிபி - ரூ.1,04,900
512 ஜிபி - ரூ.1,24,900
1டிபி - ரூ.1,44,900


Click it and Unblock the Notifications








