Home
News

iPhone விலைக்கு அறிமுகமான Apple-ன் புதிய iPad.. அதுவும் M3 Chip உடன்.. மார்ச் 11 முதல் விற்பனை.. எந்த மாடல்?

ஐபோன் 16 சீரிஸின் கீழ், ரூ.59,900 க்கு புதிய ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை அறிமுகம் செய்த சில நாட்களுக்கு பின்னர், ஆப்பிள் (Apple) நிறுவனமானது, இந்திய சந்தையில் அதன் புதிய ஐபேட் ஏர் 7த் ஜெனரேஷன் (iPad Air 7th Generation) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது

இவைகள் கடந்த ஆண்டு எம்2 சிப்களுடன் அறிமுகமான 6த் ஜென் ஐபேட் ஏர் (6th Gen iPad Air with M2 chips) மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாகும். புதிய ஐபேட் ஏர் 2025 (iPad Air 2025) மாடல்கள் எம்3 சிப்செட் (M3 Chip) உடன் வருகின்றன. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

iPhone விலைக்கு அறிமுகமான Apple-ன் புதிய iPad.. அதுவும் M3 Chip உடன்!

ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 - முக்கிய அம்சங்கள்: ஆப்பிள் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஐபேட் ஏர் மாடல்களை 2 வகையான டிஸ்பிளே அளவுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது: 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) மற்றும் 13 இன்ச் (2732×204 பிக்சல்கள்) மாடல்கள். இரண்டுமே ரெடினா ட்ரூ டோன் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

இது 8-கோர் ஆப்பிள் எம்3 சிப் (8-core Apple M3 chip) மூலம் இயங்குகிறது. இதில் 9-கோர் ஜிபியு (9-core GPU) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (16 core Neural Engine) அடக்கம். இந்த ப்ராசஸர் 8ஜிபி ரேம் (8GB RAM) மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (1TB Internal Storage) உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை 4K 60fps ரெக்கார்டிங் ஆதரவுடன் 12எம்பி ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி சென்சார் உள்ளது. ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் ஏர் மாடல் ஆனது ஐபேட்ஓஎஸ் 18 (iPadOS 18) கொண்டு இயங்குகிறது. குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டாப் ஐடி, யூஎஸ்பி 4, 5ஜி அல்லது வைஃபை 6இ வேரியண்ட் வகைகள், தண்டர்போல்ட் 3 ஆதரவு மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 - விலை மற்றும் விற்பனை விவரங்கள்: புதிய ஐபேட் ஏர் 2025 மாடல்கள் ஆனது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. கூடவே இவைகளை ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்களிடமிருந்தும் (Authorized resellers) வாங்கலாம். முதல் விற்பனை மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள் (Apple iPad Air 11-inch WiFi Only Price in India):
128 ஜிபி - ரூ.59,900
256 ஜிபி - ரூ.69,900
512 ஜிபி - ரூ.89,900
1 டிபி - ரூ.1,09,900

ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள் (Apple iPad Air 11-inch WiFi + Cellular Price in India):
128 ஜிபி - ரூ.74,900
256 ஜிபி - ரூ.84,900
512 ஜிபி - ரூ.1,04,900
1டிபி - ரூ.1,24,900

ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள் (Apple iPad Air 13-inch WiFi Only Price in India):
128 ஜிபி - ரூ.79,900
256 ஜிபி - ரூ.89,900
512 ஜிபி - ரூ.1,09,900
1டிபி - ரூ.1,29,900

ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள் (Apple iPad Air 13-inch WiFi + Cellular Price in India):
128 ஜிபி - ரூ.94,900
256 ஜிபி - ரூ.1,04,900
512 ஜிபி - ரூ.1,24,900
1டிபி - ரூ.1,44,900

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple 11 inch 13 inch iPad Air M3 Chip Launched in India Price Starts Rs 59900 First sale March 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X