ஆண்ட்ராய்ட் அப்டேட்டை எளிதாக்கிய ஆண்டாய்ட் 'ஓ'வின் புதிய முறை

By Siva
|

சமீபகாலம் வரை ஆண்ட்ராய்டில் புதிய அம்சங்களை அப்டேட் செய்வது என்பது ஒரு கடினமாக வேலையாக இருந்தது. ஆனால் தற்போது ஆண்ட்ராய்ட் 'ஓ'வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய முறை காரணமாக இந்த பிரச்சனை முற்றிலும் நீக்கப்பட்டு எளிதாக அப்டேட் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் அப்டேட்டை எளிதாக்கிய ஆண்டாய்ட் 'ஓ'வின் புதிய முறை

எனவே ஐஒஎஸ்-க்கு கடும் போட்டியாக ஆண்ட்ராய்டு உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கருதப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் ஓஎஸ்-இல் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் இந்த புதிய அம்சங்களை அப்டேட் செய்வது என்பது அதிக செலவு மற்றும் அதிக நேரம் ஆகியவை ஆகும் என்பது இதுவரை வாடிக்கையாளர்கள் சந்தித்த பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் தற்போது மிக எளிதாக, விரைவாக குறைந்த செலவில் அப்டேட் செய்யும் முறையை ஆண்ட்ராய்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த முறையின்படி முன்புபோல் ஆண்ட்ராட் கோட்-களை முழுவதும் ரீரைட் செய்யாமல் தற்போது மிக எளிதாக புதிய முறை ஒன்றின் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ராய்ட் நிறுவனத்தின் பிளாக் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவெனில், 'ஆண்ட்ராய்ட் நிறுவனத்தில் பணிபுரியும் திறமையானவர்களின் கைங்கரியத்தால் தற்போது அப்டேட் பிரச்சனைக்கு மிக எளிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

நோக்கியா 9 : படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்தது.!

இதனால் நிறுவனத்தினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த டிரெபிள் புரொஜக்ட் மூலம் மிகச்சிறிய அளவில் மாற்றம் செய்தாலே அப்டேட் ஆகிவிடும் என்பது சிறப்பான ஒன்று ஆகும்

எனவே இனிமேல் ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், மாற்றத்தை பெற சிப் உற்பத்தியாளர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிதாக சிப்'-இல் ஒருசில மாற்றங்கள் செய்து உங்களுக்கு தந்துவிடுவார்கள் என்பதால் அப்டேட் என்பது இனி மிக எளிதான விஷயமாக மாறிவிடும். எனவே ஒரு வாடிக்கையாளர் இனிமேல் ஆண்ட்ராய்ட் 8.0 அப்டேட் செய்ய வேண்டும் என்றால் மிக விரைவாக அப்டேட் செய்து கொள்ளலாம்

கூகுள் நிறுவனம் இந்த மாற்றம் குறித்து கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆண்ட்ராய்ட் ஹார்ட்வேர் பகுதியில் மாற்றம் செய்ய டிவைஸ் மேக்கர்களிடம் தங்களுடைய செட்டை கொடுத்து அதிக நேரம் காத்திருக்காமல் உடனடியாக அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் ஓஎஸ் பிரேம் ஒர்க்கை வாங்கி கொண்டு செலலாம். சிலிக்கான் தயாரிப்பாளர்களால் நடக்கும் இந்த மாற்றம் மிக எளிதாக, விரைவாக நடந்துவிடும் என்பதால் வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது' என்று கூறியுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஆண்ட்ராய்ட் ஓ டெல்வப்பர் பிரிவியூவில் உள்ள பிக்சல் போன்களில் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Till now we have seen how Android faced some problems regarding its update.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X