நிமிடத்தில் 'பறந்து' வரும் சூப்பர் ஆம்புலன்ஸ்..!
அவசர உதவி கால நேரங்களில், பிழைப்பதற்க்கும் இறப்பதற்க்கும் நடுவே இருப்பது சில நிமிடங்கள் மட்டுமே. எவ்வளவுக்கு எவ்வளவு அந்த இடைப்பட்ட நேரம் குறைக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகம் உயிர் காப்பாற்றப்படுவதற்க்கான சாத்தியமும் அதிகமாகும்.
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!
பொதுவாக அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வர குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்கிறது ஒரு ஆய்வு. ஆனால், அது இடத்திற்கு இடம் வேறுபடும் என்பதும் நமக்கு தெரிந்ததே. அவசரத்திற்கு அழைத்த ஒரு நிமிடத்தில் ஆபத்பாண்டவன் போல ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும். இதோ இப்படித்தான் இருக்கும்..

பறக்கும் ஆம்புலன்ஸ் :
இதன் பெயர் ஆம்புலன்ஸ் ட்ரோன், அழைத்த ஒரு நிமிடத்தில் பறந்து வந்து சேரும்.

மெடிக்கல் கிட் :
இது பல்நோக்கு மருத்துவம் செய்யத் தகுந்த ஒரு மெடிக்கல் கிட்டை சுமந்து வரும்.

உயிர் காக்கும் கருவிகள் :
மருந்துகள் மட்டுமின்றி அதனுள், அதிர்வு கருவி, மீளுயிர்ப்பு சுவாச உதவி போன்றவையும் அடக்கம்.

'முதல்' உதவி :
அழைத்த ஒரு நிமிடத்திற்குள் கிளம்பி, சேர வேண்டிய இடத்தை வந்தடையும். பின்தான் ஆம்புலன்ஸ் வந்தடையும்.

கைப்பிடி :
வந்து இறங்கியதும், அதை ஒரு சூட் கேஸைப் போல் தூக்கிக்கொண்டு செல்ல ஏதுவாக, அதில் கைப்பிடி போலதொரு அமைப்பும் உண்டு.

நேரடி ஆலோசனை :
மருந்துகளும், கருவிகளும் தவிர்த்து அதில் ஒரு லைவ் கேமிராவும் உண்டு. அதன் மூலம் மறுமுனையில் தயாராக இருக்கும் மருத்துவர்களிடமிருந்து நேரடி ஆலோசனைகளையும் பெறமுடியும்.

உயிர் காக்கும் படைப்பாளி :
இந்த அம்புலன்ஸ் ட்ரோனை கண்டு பிடித்தவர் - அலெக்ஸ் மோன்டோன், டெல்ஃப்ட் பல்கலைகழகம்.

நம்பிக்கை :
இந்த அற்புதமான படைப்பின் மூலம், அவசர உதவி காலத்தில் உயிர் பிழைப்போரின் விகிதத்தை 8 முதல் 80 % வரை உயர்த்தலாம் என்று நம்புகிறார் அலெக்ஸ்..!


Click it and Unblock the Notifications