Home
News

வெறும் ரூ.5299 க்கு புது ஸ்மார்ட்போன்.. அதிர விடும் Amazon Sale.. என்னென்ன போன்கள் மீது ஆஃபர்? இதோ லிஸ்ட்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் அதன் மிக முக்கியமான பண்டிகை கால விற்பனைகளில் ஒன்றான பிக் பில்லியன் டேஸ் சேல் 2023-ஐ 'டீஸ்' செய்ய தொடங்கியுள்ள நிலையில், அமேசான் (Amazon) வலைத்தளம் அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனை எப்போது தொடங்கும்? நம்பகமான 2 டிப்ஸ்டர்களின் (@stufflistings மற்றும் @yabhishekd)) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 (Amazon Great Indian Festival Sale 2023) வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியன்று தொடங்கும்.

வெறும் ரூ.5299 க்கு புது ஸ்மார்ட்போன்.. அதிர விடும் Amazon Sale!

அதாவது அடுத்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் தேதிகளை அமேசான் வலைத்தளம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட்டின் 2023 பிக் பில்லியன் டேஸ் சேலுக்கு (Flipkart Big Billion Days Sale 2023) போட்டியாக நடக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இவ்விரு இ-காமர்ஸ் நிறுவனங்களுமே பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரே நேரத்தில் தங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவிக்கும் பழக்கத்தை ./ வழக்கத்தை கொண்டுள்ளன. குறிப்பாக நவராத்திரி மற்றும் தீபாவளி (Navratri and Diwali) பண்டிகை காலங்களில் இவ்விரு தளங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு தத்தம் சிறப்பு விற்பனைகளை நடத்தும்.

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023-ஐ பொறுத்தவரை, மற்ற விற்பனைகளை போலவே இம்முறையும் பல்வேறு தயாரிப்புகளின் மீது பலவிதமான டீல்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் மற்றும் அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு (Amazon Prime Members) முன்கூட்டிய அணுகலும் கிடைக்கும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? தற்போது நேரலையில் உள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 பக்கத்தில், பெஸ்ட் செல்லிங் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஜெட் விலையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் என்கிற இரண்டு பிரிவுகளில் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பட்டியலிப்பட்டுள்ளன,.

பெஸ்ட் செல்லிங் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G), ஒன்பிளஸ் நோர்ட் 3 சிஇ 5ஜி (OnePlus Nord 3 CE 5G), ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G), ஐக்யூ இஸட்7எஸ் (iQOO Z7s), ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7) போன்ற மாடல்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் என்கிற பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14 5G), டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G), ஒப்போ ஏ 78 5ஜி (Oppo A78 5G), சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13), ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன்ற மாடல்கள் பட்டியலிப்பட்டுள்ளன

அதே பிரிவில் ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53), ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQoo Z6 Lite 5G), சாம்சங் கேலக்ஸி எம்4 (Samsung Galaxy M04), ரெட்மி 12சி (Redmi 12C), ஐடெல் ஏ6எஸ் (Itel A6S), லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) மற்றும் லாவா பிளேஸ் 5ஜி ( Lava Blaze 5G) போன்ற ஸ்மார்ட்போன்களை பட்டியலிப்பட்டுள்ளன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து, ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகளின் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வங்கி சலுகைகளை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் 10% வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Sale 2023 Mobile Phone Offers Revealed Expected To Start on October 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X