Home
News

80% வரை தள்ளுபடி! அடிச்சு நொறுக்கும் Flipkart Big Billion Days Sale ஆஃபர்ஸ்.. புது Phone வாங்க சூப்பர் சான்ஸ்!

ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி (Navaratri) ,மற்றும் தீபாவளி (Diwali) பண்டிகை காலங்களின் போது நடக்கும் பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையானது (Flipkart Festival Sale) இந்தாண்டு எப்போது தொடங்கும் என்று ஆவலாக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியவர்களில் நீங்களும் ஒருவரா? ஆமென்றால் தயாராகி கொள்ளுங்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023) விற்பனையானது "தயார் நிலையில்" உள்ளது. இந்த விற்பனைக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், என்னென்ன போன்கள் மீது? என்னென்ன வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்குமென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அடிச்சு நொறுக்கும் Flipkart Big Billion Days Sale ஆஃபர்ஸ்!

என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? பிளிப்கார்ட் வலைத்தளத்தின்படி, பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 விற்பனையானது ஐசிஐசிஐ (ICICI) பேங்க், ஆக்சிஸ் (Axis) பேங்க், கோடக் (Kodak) பேங்க் மற்றும் பேடிஎம் (Paytm) உடன் இணைந்து பல்வேறு வகையான கட்டண முறைகளின்கீழ் உடனடி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் உருவாக்கியுள்ள ஒரு பிரத்யேக பக்கத்தின்படி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை (Debit and Credit Cards) பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியை (Instant Discount) பெறுவார்கள்.

பேடிஎம் பயனர்கள் இந்த விற்பனையின் போது பேடிஎம், யுபிஐ மற்றும் வாலட் பரிவர்த்தனைகளில் உறுதியான சேவிங்ஸை (Assured savings) பெற முடியும். இது தவிர்த்து நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் போன்ற விருப்பங்களும், பிளிப்கார்ட் பே லேடர் (Flipkart Pay Later) வசதியும் அணுக கிடைக்கும்.

எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கும்? ஆப்பிள் (Apple), ஐக்யூ (iQOO), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), ரியல்மி (realme) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது கணிசமான தள்ளுபடிகள் கிடைக்கும். பல மொபைல் மாடல்களுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் தளம் குறிப்பிட்ட்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய ஸ்மார்ட்போன் டீல்களில் மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G), சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி (Samsung Galaxy F34 5G), ரியல்மி சி51 (Realme C51), ரியல்மி 11 5ஜி (Realme 11 5G), ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G) பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் இன்பினிக்ஸ் ஸீரோ 30 5ஜி (Infinix ZERO 30 5G), மோட்டோ ஜி84 5ஜி (Moto g84 5G), விவோ வி29இ (Vivo V29e) மற்றும் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) போன்ற மாடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது தவிர்த்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) மாடலானது கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபோன் 14 சீரிஸ் (iPhone 14 Series) மற்றும் ஐபோன் 13 சீரீஸ் (iPhone 13 Series) மாடல்கள் ஆனது பெரிய அளவிலான விலைக்குறைப்புகளைக் காணலாம்.

கூகுளின் பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) மற்றும் பிக்சல் 6 சீரிஸ்களும் (Google Pixel 6 Series) கூட தள்ளுபடி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் அதன் மிக முக்கியமான ஒப்பந்தங்களை விற்பனை தொடங்கும் வரை ரகசியமாக வைத்திருக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறது.

ஐபோன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்படும், அதே நேரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 3 ஆம் தேதி டீஸ் செய்யப்படும். ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடும்; பிக்சல் போன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும்

வழக்கம் போல பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 விற்பனைக்கும் கூட பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு எர்லி அக்சஸ் (Early Access), அதாவது மற்ற அனைவரும் இந்த விற்பனையின் கீழ் கிடைக்கும் சலுகைகள் ஆனது ஒரு நாளுக்கு முன்பாகவே பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Up to 80 Percentage Discount on Smartphones Flipkart Big Billion Days Sale 2023 Bank Offers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X