e-KYC சேவையை ஆரம்பிக்கும் ஏர்டெல்-வோடோபோன் நிறுவனங்கள்

By Super Admin
|

முன்பெல்லாம் ஒரு சிம்கார்டு வாங்கினால் அது ஆக்டிவேஷன் ஆக ஓரிரண்டு நாட்கள் ஆகும். சில சமயம் ஒருவாரம் கூட ஆகுவதுண்டு. இந்நிலையில் சிம் வாங்கிய ஒருசில நிமிடங்களில் ஆக்டிவேஷன் ஆகும் வகையில் புதிய சேவையை ஏர்டெல் மற்றும் வோடோபோன் தொடங்கியுள்ளது. இதற்கு e-KYC என்று பெயர்

e-KYC சேவையை ஆரம்பிக்கும் ஏர்டெல்-வோடோபோன் நிறுவனங்கள்

e-KYC என்றால் என்ன?
Know Your Confirmation' என்பதுதான் e-KYC என்பதன் விரிவாக்கம். உங்களிடம் ஒரு ஆதார் கார்டு இருந்தால் அதில் உள்ள விபரங்கள் மூலம் உடனடியாக ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டு உங்கள் சிம்கார்டு ஒருசில நிமிடங்களில் செயல்பட தொடங்கும்.

மோட்டோ இசட் மொபைல் எப்படி இருக்கும் தெரியுமா?

எப்பொழுது முதல் இந்த வசதி?
இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் இந்த e-KYC சேவையை ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ளது.

e-KYC சேவையை ஆரம்பிக்கும் ஏர்டெல்-வோடோபோன் நிறுவனங்கள்

என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு ஏர்டெல் அல்லது வோடோபோன் சிம்கார்டை வாங்க விரும்பினால் உடனடியாக உங்களுக்கு அருகில் உள்ள குறிப்பிட்ட ஷோ ரூமுக்கு செல்ல வேண்டும். தொலைத்தொடர்பு துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் உங்கள் ஆதார் கார்டு விபரங்கள் உடனடியாக ஒருசில நிமிடங்களில் சரிபார்க்கப்படும். உங்கள் விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும். இதிலிருந்து உங்கள் விபரங்கள் வெரிபிகேஷன் செய்யப்பட்டதாக நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும். இந்த தகவலை வோடோபோன் இந்திய இயக்குனர் சந்தீப் கட்டாரியா உறுதி செய்துள்ளார்.

பூமியின் முதல் புகைப்படம் இது தான்!!

முதலில் இந்த சேவையை ஆகஸ்ட் 24 முதல் டெல்லியில் தொடங்கவுள்ளதாகவும் மிக விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இந்த சேவை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

e-KYC சேவையை ஆரம்பிக்கும் ஏர்டெல்-வோடோபோன் நிறுவனங்கள்

ஃபிங்கர் பிரிண்ட் உடன் கூடிய இந்த ஆதார்டு கார்டு வெரிபிகேஷன் போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்த சேவை வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினர்களுக்கும் பாதுகாப்பு என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Country's two leading mobile operators Bharti Airtel and Vodafone are rolling out e-KYC service at their stores to help customers activate new SIMs instantly with Aadhaar number verification.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X