Airtel-ன் Summer ஆபர்.. 2GB, 3GB இலவச டேட்டா அறிவிப்பு.. எந்த திட்டங்களில்?
2026 கோடை விடுமுறை காலத்தில் வெளிநாடு செல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு, பார்தி ஏர்டெல் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சர்வதேச ரோமிங் பேக்குகளில் (Prepaid International Roaming packs) கூடுதல் சலுகைகளுடன் பிரத்யேக நன்மைகளை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் வெளிநாடு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் ஐஆர் பேக்குகள் வழங்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளவும்.
ஒரு பருவகால விடுமுறை சலுகை ஆக, ஏர்டெல் தனது இரண்டு ப்ரீபெய்ட் பேக்குகளில் 5-நாள் மற்றும் 10-நாள் செல்லுபடியுடன் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. அவைகள் ஏர்டெல் ரூ.898 ப்ரீபெய்ட் ஐஆர் பேக் மற்றும் ஏர்டெல் ரூ. 1198 ப்ரீபெய்ட் ஐஆர் பேக் ஆகும்.

ஏர்டெல்லின் ரூ.898 ப்ரீபெய்ட் ஐஆர் பேக் இப்போது ஒரு பிரத்யேக சலுகையின் கீழ் கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே, இந்த பேக்கின் நன்மைகளில் இப்போது 4ஜிபி (2ஜிபி + கூடுதல் 2ஜிபி) டேட்டா, இந்தியாவிற்கு 150 நிமிட அழைப்புகள், உள்ளூர் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள், மற்றும் 20 வெளிச்செல்லும் எஸ்எம்எஸ்கள் ஆகியவைகள் அடங்கும், இவை அனைத்தும் 5 நாட்கள் செல்லுபடியுடன் கிடைக்கும்.
மறுகையில் உள்ள ஏர்டெல்லின் 10-நாள் செல்லுபடியாகும் ஐஆர் பேக் ஆன ரூ.1198 திட்டமானது, 189 நாடுகளில் இணைப்பு வசதியை வழங்குகிறது. தற்போது, இந்த திட்டத்தில் ஒரு பிரத்யேக சலுகையின் கீழ் கூடுதலாக 3ஜிபி டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த பேக்கின் நன்மைகளில் இப்போது 6ஜிபி (3ஜிபி + கூடுதல் 3ஜிபி) டேட்டா, இந்தியாவிற்கு 200 நிமிட அழைப்புகள், உள்ளூர் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் ஆகியவைகள் அடங்கும், இவை அனைத்தும் 5 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும்.
இந்த பேக்கில் இப்போது 6GB அதிவேக டேட்டா (3GB + கூடுதலாக 3GB), 20 SMS, மற்றும் இந்தியாவிற்கு 200 நிமிட அழைப்புகள், அத்துடன் உள்ளூர் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளும் அடங்கும். முன்னரே குறிப்பிட்டபடி இவைகள் அனைத்தும் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஆக, ஒட்டுமொத்தமாக, இந்த கோடையில் வெளிநாடு செல்பவர்களுக்காக, 5-நாள் செல்லுபடியாகும் ஐஆர் பேக்கில் கூடுதலாக 2ஜிபி டேட்டாவும், 10-நாள் செல்லுபடியாகும் ஐஆர் பேக்கில் 3ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், இந்த கூடுதல் பலன்கள் ஏர்டெல் ஆப் மற்றும் இணையதளத்தில் அணுக கிடைக்கின்றன.
ஏர்டெல் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவைகளை (Priority Postpaid services) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவை ஆனது, வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் 5ஜி நெட்வொர்க்கிற்கான (Premium 5G network) அணுகலை வழங்கும்.
இந்த சேவையின் கீழ் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனமானது அடிப்படையில் நெட்வொர்க் ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை (Network slicing technology) பயன்படுத்தும். இது தற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. இந்த சேவையின் கீழ் ரூ.449 முதல் தொடங்கி ரூ.1749 வரை செல்லும் 5 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 5 திட்டங்களின் விரிவான நன்மைகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இணக்கமான 5ஜி ஸ்டாண்டலோன் (SA) ஸ்மார்ட்போன்களை கொண்ட வாடிக்கையாளர்கள் 'ப்ரையாரிட்டி' சேவையை அணுகலாம் என்றும் ஏர்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது 5ஜி எஸ்ஏ வசதி கொண்ட எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் வாடிக்கையாளர்கள் தனது முன்னுரிமை சேவையை (Priority service) பெறலாம் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நடுத்தர அல்லது பிரீமியம் விலை பிரிவில் உள்ளவை, 5ஜி எஸ்ஏ-வை ஆதரிக்கின்றன.


Click it and Unblock the Notifications