Home
News

Airtel ஆரம்ப ரீசார்ஜ் விலை உயர்வு.. இனி SIM கார்டை ஆக்டிவ் ஆக வைக்க எவ்வளவு செலவு செய்யணும்?

ஏர்டெல் (Airtel) நிறுவனமானது வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் அதன் ஆரம்ப விலை ரீசார்ஜ் ஆன ரூ.189 திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக, அதே வேலிடிட்டி மற்றும் அதே நன்மைகளை வழங்கும் ரூ.199 திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.

இதை பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரீசார்ஜ் விலை உயர்வாகவும் (Airtel Tariff Hike) பார்க்கலாம். ஏனென்றால் இந்த நடவடிக்கையின் மூலம் ஏர்டெல் கஸ்டமர்கள் தங்கள் சிம் கார்ட்டை 28 நாட்களுக்கு ஆக்டிவ் ஆக வைத்திருக்க ரூ.10 அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ரூ.199 க்கு அடுத்தபடியாக வாய்ஸ் வித் டேட்டா பிரிவில் ரூ.219 உள்ளது. இதேபோல வாய்ஸ்-ஒன்லி பிளான்கள் ரூ.469 முதல் தொடங்குகிறது.

Airtel ஆரம்ப ரீசார்ஜ் விலை உயர்வு.. இனி SIM கார்டை ஆக்டிவ் ஆக வைக்க?

1. ஏர்டெல் ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: ஏர்டெல் ரூ.199 திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 2 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (2ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டபடி ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.199-ன் கீழ் ஏர்டெல் ரிவர்ட்ஸ்-ன் கீழ் ஏர்டெல் ஹலோட்யூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் இலவசமாக ஏதேனும் ஒரு ட்யூனை செட் செய்யலாம்) மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா ஆகியவைகள் கிடைக்கும்.

2. ஏர்டெல் ரூ.219 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 3 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (3ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.219-ன் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளும் கிடைக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் அணுகல், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் (30 நாட்களுக்கு ஒரு ட்யூன்) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

3. ஏர்டெல் ரூ.489 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 6 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (3ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

77 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.489-ன் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளும் கிடைக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் அணுகல், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் (30 நாட்களுக்கு ஒரு ட்யூன்) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

4. ஏர்டெல் ரூ.548 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 900 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 7 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (3ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.548-ன் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளும் கிடைக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் அணுகல், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் (30 நாட்களுக்கு ஒரு ட்யூன்) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

5. ஏர்டெல் ரூ.2249 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 360 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 30 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (3ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.2249-ன் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளும் கிடைக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் அணுகல், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் (30 நாட்களுக்கு ஒரு ட்யூன்) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

ஒருவேளை உங்களுக்கு டேட்டா சலுகைகள் தேவையில்லை என்றால், அதாவது ஏர்டெல்லின் வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் வேண்டும் என்றால் உங்களுக்கு 2 விருப்பங்கள் உள்ளன. ஒன்று - ரூ.469, இரண்டாவது - ரூ.1849. முதல் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும்; இரண்டாவது திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.469-ன் நன்மைகளை பொறுத்தவரை அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 900 எஸ்எம்எஸ்களை வழங்கும். ரூ.1849 ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்களை வழங்கும். இரண்டுமே ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel SIM Card Active Plans Nov 2025 Voice With Data Starts Rs 199 Voice only Plans From Rs 469
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X