Home
News

ATM தெரியும்! இது என்னப்பா புதுசா மைக்ரோ ATM? இப்படி கூட பணம் எடுக்கலாமா? நல்லாருக்கே.!

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இப்போது எல்லாமே ஷார்ட் ஆகவும், குயிக் ஆகவும் நமக்குக் கிடைத்துவிடுகிறது. நம்முடைய நேரத்தை அதிகம் மிச்சம் பிடிக்கும் படி, 2 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் நூடில்ஸ், சில நிமிடங்களில் பணப்பரிமாற்றம், நொடியில் ஆன்லைன் ஷாப்பிங், மினி வெர்ஷன் லைட் வெர்ஷன் என்று நம் அன்றாட வாழ்க்கையில் செய்யக் கூடிய அணைத்து விஷயங்களும் மாறிவிட்டது. இப்போது Airtel நிறுவனம் நம்முடைய ATM அனுபவத்தை மாற்ற மைக்ரோ ஏடிஎம் (Micro ATM) என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ATM தெரியும்! இது என்னப்பா புதுசா மைக்ரோ ATM?

ATM தெரியும்! இது என்னப்பா புதுசா மைக்ரோ ATM?

ATM என்றால் என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும், இது என்னப்பா புதுசா மைக்ரோ ATM? இது என்ன செய்யும்? எப்படி நமக்குப் பணத்தை வழங்கும்? இந்த சேவையைப் பயன்படுத்த நம்முடைய சாதாரண டெபிட் கார்டே போதுமானதா? எவ்வளவு தொகையை இந்த மைக்ரோ ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கான தெளிவான விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப்போகிறோம். வாங்க நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம்.

Airtel Payments Bank அறிமுகம் செய்த புதிய மைக்ரோ ஏடிஎம் சேவை.!

Airtel Payments Bank அறிமுகம் செய்த புதிய மைக்ரோ ஏடிஎம் சேவை.!

பாரதி ஏர்டெல்லின் வங்கி துணை நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் (Airtel Payments Bank), அதன் பயனர்கள் இனி ATM வரிசையில் காத்திருக்காமல், மிகவும் எளிமையாகவும், வசதியாகவும் பணம் எடுப்பதற்காக, புதிதாக மைக்ரோ ஏடிஎம் என்ற சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைத்து டெபிட் கார்டு பயனர்கள் இந்த சேவையின் மூலம் எளிதாகப் பணத்தை எடுக்க முடியும்.

WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!

இனி ATM மையங்களைத் தேடி அலைய வேண்டாம்.!

இனி ATM மையங்களைத் தேடி அலைய வேண்டாம்.!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் இன் கீழ் பல லட்சம் பேங்கிங் பாயிண்ட்கள் இந்தியா முழுக்க இருக்கின்றன. இந்த பேங்கிங் பாயிண்ட்களில் இனி மைக்ரோ ஏடிஎம் சேவை கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பயணத்தின் போது அல்லது அவர்களுக்குத் தேவைப்படும் போது, ATM மையங்களைத் தேடி அலையாமல், அருகில் இருக்கும் ஏர்டெல் பேங்கிங் பாயிண்ட் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்று Airtel கூறியுள்ளது.

மைக்ரோ ஏடிஎம் பரிவர்த்தனைகளை பயனர்கள் எப்படி செய்யலாம்?

மைக்ரோ ஏடிஎம் பரிவர்த்தனைகளை பயனர்கள் எப்படி செய்யலாம்?

இந்தியா முழுவதும் 500,000க்கும் மேற்பட்ட பேங்கிங் பாயிண்ட்களை கொண்ட ஏர்டெல், அதன் வலுவான நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, இந்த முயற்சியின் மூலம் பயனர்களுக்கு எளிதாகப் பணம் எடுப்பதற்கான அணுகலை வழங்கும் என்று கூறியுள்ளது. மைக்ரோ ஏடிஎம் பரிவர்த்தனைகளை எளிதாக்க, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இப்போது இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI - National Payments Corporation of India) மற்றும் தேசிய நிதி மாற்றத்துடன் (NFS - National Financial Switch) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எந்த வங்கி டெபிட் கார்டாக இருந்தாலும் இந்த Micro ATM சேவை வேலை செய்யுமா?

எந்த வங்கி டெபிட் கார்டாக இருந்தாலும் இந்த Micro ATM சேவை வேலை செய்யுமா?

எந்த வங்கி டெபிட் கார்டாக இருந்தாலும், நீங்கள் பணம் எடுக்கலாம் என்பது சிறப்பானது. அருகிலுள்ள ஏர்டெல் பேங்கிங் பாயிண்ட் சென்று மைக்ரோ ஏடிஎம் வசதியைப் பயன்படுத்தி இனி உடனடியாக பணம் எடுக்கலாம் மற்றும் உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். ஒரு வாடிக்கையாளர் மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் ரூ.10,000 வரை எடுக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.

எங்கெல்லாம் இந்த மைக்ரோ ATM சேவை பயன்படுத்த கிடைக்கும்?

எங்கெல்லாம் இந்த மைக்ரோ ATM சேவை பயன்படுத்த கிடைக்கும்?

இது ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்கிங் சேவையை வங்கித் துறையில் மிக முக்கியமான நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஏர்டெல்லின் மைக்ரோ ஏடிஎம் சேவை இந்தியா முழுவதும் கட்டம் வாரியாக விரிவுபடுத்தப்படும். ஆரம்பத்தில், நிறுவனம் 150,000 டையர் 2 நகரங்கள் மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் இந்த சேவையைத் துவங்குவதாக அறிவித்துள்ளது.

மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் எப்படிப் பணம் எடுக்கலாம்?

மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் எப்படிப் பணம் எடுக்கலாம்?

இந்த பகுதிகளில் தான் ATM மூலம் பணம் எடுக்க விரும்பும் பயனர்கள் அதிகமாக உள்ளனர், ஆனால் ஏடிஎம்களுக்கான அணுகல் மிகவும் குறைவாக உள்ளது என்று ஏர்டெல் கூறியுள்ளது. சரி, இப்போது மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் எப்படிப் பணத்தை எடுக்கலாம்? என்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம். இந்த முறையை பின்பற்றி உங்களால் அதிகபட்சம் வெறும் ரூ.10,000 வரை மட்டுமே வித்ட்ரா செய்ய முடியும் என்பதை மறக்காதீர்கள்.

Micri ATM மூலம் பணம் எடுக்கும் முறை.!

Micri ATM மூலம் பணம் எடுக்கும் முறை.!

  • நீங்கள் வித்ட்ரா செய்ய விரும்பும் தொகையை வங்கி நிருபர்கள் (BCs) உள்ளிட்டுப் பரிவர்த்தனையைத் தொடங்குவார்கள்.
  • வாடிக்கையாளர் தனது டெபிட் கார்டை Micro ATM சாதனத்தில் சொருகி, பரிவர்த்தனையை உறுதிப்படுத்த PIN நம்பரை உள்ளிட்ட வேண்டும்.
  • பரிவர்த்தனையை முடிக்க BC அவர்களின் MPIN ஐ உள்ளிடுவதன் மூலம் பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படும்.
  • பரிவர்த்தனை வெற்றிகரமாக இருந்தால், BC வாடிக்கையாளர் உங்களுக்குப் பணத்தை வழங்குவார்.

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Launched Micro ATMs For Users To Withdraw Cash Easily Up To Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X