WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!

|

Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp இப்போது அதன் பயனர்களுக்கான ஒரு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் உடனடியாக அவர்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்கும் WhatsApp பயன்பாட்டை காலம் தாமதிக்காமல் உடனே அப்டேட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் புதிய மோசமான பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நிறுவனம் இந்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை தகவல்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை தகவல்

நீண்ட காலத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் பாதுகாப்பு குறித்த செய்திகளில் அடிப்படத் துவங்கியுள்ளது. ஆனால் இந்த முறை, வாட்ஸ்அப் இதற்கான உடனடி அப்டேட் உடன் பாதிப்பை சரிப்படுத்தியுள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி மெசேஜ்ஜிங் தளத்தில் "கிரிட்டிக்களான" பாதிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான தீர்வை பயன்பாட்டின் புதிய அப்டேட்டில் நிறுவனம் இணைத்துள்ளது.

பழைய WhatsApp வெர்ஷனை பயன்படுத்திக் கொண்டிருகிறீர்களா?

பழைய WhatsApp வெர்ஷனை பயன்படுத்திக் கொண்டிருகிறீர்களா?

எனவே, வாட்ஸ்அப் பயனர்கள் இன்னும் பழைய வெர்ஷனை பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனடியாக அவர்களுடைய வாட்ஸ்அப் ஆப்ஸை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்த WhatsApp பக்கத்தின் செப்டம்பர் புதுப்பிப்பில் இந்த பாதிப்பு பற்றிய விவரங்கள் முதலில் வெளியிடப்பட்டன. இந்த "கிரிட்டிக்கள் " பிழையானது, முழு இன்டிஜர் ஓவர்ஃப்ளோ எனப்படும் குறியீட்டுப் பிழையைப் பயன்படுத்தித் தாக்குபவர்களை உங்கள் போனிற்குள் அனுமதிக்கிறது.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

எந்தெந்த வெர்ஷன்களில் எல்லாம் இந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது?

எந்தெந்த வெர்ஷன்களில் எல்லாம் இந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது?

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடியோ அழைப்பை அனுப்பிய பிறகு, பயனரின் ஸ்மார்ட்போனில் தங்கள் சொந்த குறியீட்டை தாக்குதல் செய்பவர்கள் இயக்க இந்த பிழை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. "ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் V2.22.16.12, ஆண்ட்ராய்டுக்கான பிசினஸ் V2.22.16.12, iOS v2.22.16.12, iOSக்கான பிசினஸ் v2.22.16.12 போன்ற வெர்ஷன்களில் இந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது என்று WhatsApp குறிப்பிட்டுள்ளது.

இந்த பிழை தனிப்பட்ட தரவு அனைத்தையும் அணுக அனுமதிக்குமா?

இந்த பிழை தனிப்பட்ட தரவு அனைத்தையும் அணுக அனுமதிக்குமா?

எளிமையான வார்த்தைகளில் சொன்னால், இந்த ரிமோட் கோட் பிழை செயல்பாட்டில் இருந்தால், ஹேக்கர்கள் ஒருவரின் சாதனத்தில் கட்டளைகளைத் தொலைவிலிருந்து இயக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. இறுதியில் சாதனத்தின் பொறுப்பை எடுத்து பயனரின் தனிப்பட்ட தரவு அனைத்தையும் அணுகக் கூட இந்த பிழை அனுமதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான வாட்ஸ்அப் தளத்தில் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட்டில் பாதிப்பைச் சரிசெய்துள்ளதாகக் கூறியது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

இந்த மோசமான பிழையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த மோசமான பிழையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

எனவே, பயனர்கள் உடனடியாக அவர்களுடைய வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. உங்கள் வாட்ஸ்அப் ஆப்ஸ் சமீபத்திய அப்டேட்டிற்கு தானாகவே புதுப்பிக்கப்படவில்லை என்றால், கூகிள் பிளே ஆப்ஸ் ஸ்டோருக்குச் சென்று புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் அப்டேட்டை இன்ஸ்டால் செய்வதற்கு முன் WiFi நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.

வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்த 'Call Links' என்ன செய்யும்?

வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்த 'Call Links' என்ன செய்யும்?

இதற்கிடையில், நிறுவனம் பல புதிய அம்சங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் Call Links விருப்பம் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. சமீபத்திய கால் லிங்க் அம்சம் வெளிவருவதால், பயனர்கள் அழைப்புகள் டேப் உள்ள 'Call Links' விருப்பத்தைத் தட்ட வேண்டும், பின்னர் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பிற்கான இணைப்பை உருவாக்கி அதை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாகப் பகிர வேண்டும். இந்த அம்சத்தைப் பெற, WhatsApp பயனர்கள் தங்கள் பயன்பாட்டை சமீபத்திய அப்டேட்டிற்கு மேம்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Fixes Critical Vulnerability In Latest Version Users Need To Update The App Immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X