ஏர்டெல் அதிரடி : ஜியோவினால் முடியாததை புதிய ரூ.499/- மூலம் சாத்தியப்படுத்திய ஏர்டெல்.!
வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தரவு சேவைகளுடன் பொழுதுபோக்கு உள்ளடக்கம் மற்றும் மொபைல் ஃபோன் இன்சூரன்ஸ் ஆகிய நன்மைகளையும்சே இணைத்துள்ளது.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி ஜியோவுடன் போட்டிப்போட முடியாதென்பதை நன்கு அறிந்துகொண்ட பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டமொன்றை அறிமுகம் செய்தது.

அதாவது, அனைவரும் பின்பற்றும் ஜியோ பாணியிலான நன்மைகளை தவிர்த்து அதற்கு ஈடாக வேறென்ன வழங்கமுடியும் என்பதில் பார்தி ஏர்டெல் கவனம் செலுத்தி வருகிறது. அபப்டியானதொரு எண்ணத்தில் உருவாகியுள்ள ஒரு புதிய திட்டம் தான் ரூ.499/- ரீசார்ஜ்.!

பொழுதுபோக்கு உள்ளடக்கம் & மொபைல் ஃபோன் இன்சூரன்ஸ்.!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ.499/- என்ற அதன் மாதாந்திர திட்டத்தின் கீழ் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தரவு சேவைகளுடன் பொழுதுபோக்கு உள்ளடக்கம் மற்றும் மொபைல் ஃபோன் இன்சூரன்ஸ் ஆகிய நன்மைகளையும்சே இணைத்துள்ளது.

வரம்பற்ற இலவச வெளிச்செல்லும் அழைப்பு உட்பட.!
"வாடிக்கையாளர்கள் இப்போது, நாடு முழுவத்திலுமான வரம்பற்ற இலவச வெளிச்செல்லும் அழைப்பு உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் ஆகிய நன்மைகளுடன் 20ஜிபி அளவிலான 4ஜி அல்லது 3ஜி டேட்டாவை மாதத்திற்கு ரூ.499/-க்கு அனுபவிக்கலாம்" என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

இலவச சந்தா.!
இந்த புதிய திட்டமானது, ஸ்மார்ட்போன்கள் மீதான பிஸிக்கல் டேமேஜ் மற்றும் மால்வேர் தாக்குதல் ஆகியவைகளிடமிருந்து கருவியை பாதுகாக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் டிவைஸ் ப்ரொடெக்ஷன் திட்டத்துடன் இணைக்க்கப்பட்டுள்ளது. உடன் திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளை பார்த்து மகிழும் வண்ணம் ஏர்டெல் டிவியின் இலவச சந்தா மற்றும் வின்க் ம்யூசிக் (Wynk Music) சந்தாவையும் இந்த திட்டம் வழங்கும்.

200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத தரவை ரோல்ஓவர்.!
20ஜிபி அளவிலான டேட்டா நன்மையுடன் சேர்த்து இந்த திட்டத்தின் கீழ், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அடுத்த பில்லிங் சுழற்சிக்கு சுமார் 200ஜிபி அளவிலான பயன்படுத்தப்படாத தரவை எடுத்து செல்ல முடியும். ரோல்ஓவர் செய்யப்பட்ட டேட்டா பேலன்ஸை மைஏர்டெல் பயன்பாட்டில் சரிபார்க்க முடியும்.

மற்றொரு ரூ.448/- திட்டம்.!
சமீபத்தில் அறிமுகமான ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- திட்டமானது ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து 70ஜிபி அளவிலான 4ஜி, 3ஜி அல்லது 2ஜி டேட்டாவை வழங்குகிறது என்பதும், இந்த புதிய திட்டங்கள் இந்தியா முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications