Home
News

இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி; ஜியோவின் 1ஜிபி டேட்டா பாணியை காலி செய்த ஏர்டெல்.!

இதன் மூலம் ஏர்டெல் நிச்சயமான வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

By Muthuraj

இனி ரிலையன்ஸ் ஜியோ அளவிற்கு யாராலும் சலுகைகளையும், நன்மைகளையும் வழங்க முடியாது. கடந்த பல மாதங்களாக இந்திய டெலிகாம் துறைக்குள் நடந்த கட்டண யுத்தம் ஒரு முடிவிற்கு வந்து விட்டது என்று நாமெல்லாம் நினைக்கும் அடுத்தநொடியில் - ஒரு புதிய மற்றும் போட்டித்தன்மைமிக்க திட்டமொன்றை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவிக்கும்.

இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி; காலியானது ஜியோவின் 1ஜிபி டேட்டா பாணி.!

முடிந்த கட்டண யுத்தத்தை முதலில் இருந்து ஆரம்பிக்கும். அப்படியானதொரு ஆரம்பம் தான் ஏர்டெல் நிறுவனத்தின் சமீபத்திய கட்டண திருத்த நடவடிக்கைகள். இதன் மூலம் ஏர்டெல் நிச்சயமான வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஜியோவின் 1ஜிபி பாணி தகர்ப்பு.!

ஜியோவின் 1ஜிபி பாணி தகர்ப்பு.!

பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் அறிவித்துள்ள புதிய திட்டமொன்றானது "நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலா 4ஜி டேட்டா" என்ற ஜியோ ஆரம்பித்து வைத்த பாணியை தகர்த்துள்ளது. ஆம் அறிவிக்கப்பட்டுள்ள ஏர்டெல் ரீசார்ஜ் பேக் ஆனது நாள் ஒன்றிக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

அதிகமான தரவு.!

அதிகமான தரவு.!

ரூ.349/- என்ற விலையில் கிடைக்கும் இந்த புதிய ப்ரீபெயிட் திட்டமானது, முன்னர் வழங்கிய 1ஜிபி டேட்டாவை விட அதிகமான தரவு வழங்கும் அதே சமயம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் மொத்தம் 3000 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

வெளிப்படை.!

வெளிப்படை.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் "தண் தனா தான்" திட்டத்தை நேரடியாக தாக்கும் நோக்கத்தில் வெளியாகியுள்ள இந்த ரூ.349/- ஆனது, ஜியோவின் அழைப்பு நன்மைகளுடன் போட்டி முடியாத காரணத்தால் கூடுதலாக 0.5ஜிபி டேட்டா வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது என்பது வெளிப்படை.

செல்லுபடி காலத்தில் மாற்றம் இல்லை.!

செல்லுபடி காலத்தில் மாற்றம் இல்லை.!

ஒரே மாதிரியான விலைப்புள்ளியில் கூடுதல் தரவு வழங்கினாலும், அதன் செல்லுபடி காலத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதே 28 நாட்களுக்கு தான் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஜியோவின் ரீசார்ஜ் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெஸேஜ்களையும் வழங்குகிறது.

இலவச அழைப்புகளுக்கான வரம்பு.!

இலவச அழைப்புகளுக்கான வரம்பு.!

இந்த திட்டத்தின் அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றிற்கு மொத்தம் 1000 நிமிடங்கள் என்ற இலவச அழைப்புகளுக்கான வரம்பை கொண்டுள்ளது. வரம்பை தாண்டிய அழைப்புகளுக்கு, ஏர்டெல் டூ ஏர்டெல் என்றால் நிமிடத்திற்கு 10 பைசா என்ற விகிதத்திலும், இதர நெட்வெர்க் உடனான அழைப்புகள் என்றால் நிமிடத்திற்கு 30 பைசா என்ற விகிதத்திலும் கட்டணம் வசூலிக்கப்படும்.

மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவும்.!

மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவும்.!

இந்த புதிய ஏர்டெல் வாய்ப்பை பெற விரும்பும் பயனர்கள் தங்களின் மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவும். மேலும் பல புதிய ரீசார்ஜ் திட்டங்கள் (ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் ) சார்ந்த அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.!

Best Mobiles in India

English summary
Airtel updates Rs 349 plan; offers 1.5GB per day instead of 1GB. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X