ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!
இப்போது வரும் புதிய ஆப் வசதிகள் மற்றும் ஆன்லைன் வசதிகள் நமக்கு பல்வேறு வகையில் பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இன்றைய கால கட்டத்தில் உலகளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

அதேபோன்று தினந்தோறும் உணவு பொருட்களை வாங்க நேரடியாக கடைக்குச் செல்லாமல், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தே உணவு உண்ணும் பழக்கம் உலகளவில் பலரிடம் உள்ளது. இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் 7 வயது சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் உணவு பொருளை ஆர்டர் செய்த நிலையில் சுமார் 40 பேர் அதே உணவுடன் சிறுமியன் வீட்டை ஒரே நேரத்தில் வந்தடைந்துள்ளனர்.

அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு என்னும் பகுதியில் இணையதள வசதி மெதுவாகும், சில நேரத்தில் சுத்தமாக கிடைக்காமலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரின் மொபைல் போனில் இருந்து ஃபுட் பாண்டா (FoodPanda) செயலி மூலம் தனது உணவை ஆர்டர் செய்துள்ளார்.

அந்தசமயம் நெட் வேகம் மெதுவாக இருந்தால், ஆர்டர் ஆகவில்லை என நினைத்த சிறுமி மீண்டும் மீண்டும் ஆர்டல் பட்டனை அழுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரது ஒரே ஆர்டர் நாற்பதுக்கும் அதிகமாக பதிவாக அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சிறுமி இருந்த தெருவில் சுமார் 40-க்கும் அதிகமாக உணவு டெலிவரி ஊழியர்கள் அப்பகுதியை சூழ்ந்துள்ளனர்.
ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
உடனே இதனை அறிந்த அந்த சிறுமி அழ ஆரம்பித்துள்ளார். தான் தவறுதலாக அப்படி செய்ததை அவர் தெரிவித்த நிலையில்அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து சிறுமி ஆர்டர் செய்த உணவு பொருட்களை வாங்கியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும்புகைப்படங்களை அப்பகுதியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications