ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி15 Holiday எடிஷனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அட்டகாசமான வடிவமைப்புடன் சிறந்த மென்பொருள் வசதி கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி15 Holiday எடிஷன் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.11,430-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி15 Holiday எடிஷன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்கிற திரைவிகிதம், 420nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமன ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் Realme UI 1.0 ஆதரவும் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ரியல்மி சி15 Holiday எடிஷன் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ரியல்மி சி15 Holiday எடிஷன் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா+ 2எம்பி B&W என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி
இடம்பெற்றுள்ளது.

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுரியல்மி சி15 Holiday எடிஷன்.


Click it and Unblock the Notifications