டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
Samsung Galaxy S23 தொடரில் மிட் ரேன்ஜ் மாடலாக கேலக்ஸி எஸ்23+ மற்றும் ப்ரீமியம் மாடலாக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா இடம்பெற்றிருக்கிறது. Samsung Galaxy S23 Ultra ஆனது பிரத்யேக S Pen ஆதரவைக் கொண்டிருக்கிறது.
Samsung Galaxy S23 சீரிஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடரில் Samsung Galaxy S23, Galaxy S23+ மற்றும் Galaxy S23 அல்ட்ரா போன்கள் இடம்பெற்றுள்ளது. Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள சாம்சங் Galaxy S23+ மற்றும் Galaxy S23 அல்ட்ரா மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

Samsung Galaxy S23+ டிஸ்ப்ளே எப்படி இருக்கு?
Samsung Galaxy S23+ ஆனது கேலக்ஸி எஸ்23 தொடரில் உள்ள அடிப்படை மாடலான கேலக்ஸி 23 போன்றே ஏணைய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 240Hz டச் மாதிரி விகிதத்துடன் கூடிய 6.6-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.
விஷன் பூஸ்டர் டிஸ்ப்ளே ஆதரவு
ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான One UI 5.1 மூலம் இயங்குகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது விஷன் பூஸ்டர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. Galaxy S23+ ஆனது Qualcomm Snapdragon 8 Gen 2 மூலம் இயக்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ்23 போன்றே Galaxy S23+
சாம்சங் Galaxy S23+ ஆனது கேலக்ஸி23 போன்ற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அது 50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி கேமரா சென்சார்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடன் கூடி 12 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.
Samsung Knox மற்றும் Knox Vault ஆதரவு
சாம்சங் கேலக்ஸி எஸ் 23+ ஆனது 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இதில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இருக்கிறது. Samsung Knox மற்றும் Knox Vault அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 மதிப்பீடு இதில் இருக்கிறது.
Galaxy S23+ பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி
Galaxy S23+ ஆனது 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 45W வயர்டு சார்ஜிங்கை ஆதரவு இருக்கிறது. 30 நிமிடங்களுக்குள் 65 சதவீதம் வரை இந்த போனை சார்ஜ் செய்யலாம். ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 196 கிராம் ஆகும்.

பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23 அல்ட்ரா
Galaxy S23 சீரிஸ் இல் ப்ரீமியம் மாடலாக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான UI 5.1 மூலம் இது இயக்கப்படுகிறது. 1-120Hz டைனமிக் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 240Hz டச் மாதிரி வீதத்தை உடனான 6.8-இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC மூலம் இயக்கப்படுகிறது.
டிஜிட்டல் கேமராவுக்கு இணையான ஸ்மார்ட்போன்
கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ப்ரீமியம் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 10 எம்பி ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 10 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் கேமராவுக்கு இணையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இதில் பதிவு செய்யலாம் என கூறப்படுகிறது. செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 12 எம்பி கேமரா இருக்கிறது.
சாம்சங் S Pen ஆதரவு
Galaxy S23 Ultra ஆனது 1டிபி வரையிலான உள்சேமிப்பக விரிவாக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் உடன் எஸ் பென் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கு என IP68 மதிப்பீடு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.
எஸ்23 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த ஸ்மார்ட்போனானது 45 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் 20 நிமிடங்களில் 65 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் எடை 234 கிராம் ஆகும்.

Samsung Galaxy S23 Ultra, Galaxy S23+ விலை என்ன?
Samsung Galaxy S23+ மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் $999 (தோராயமாக ரூ.81,900) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் ப்ரீமியம் மாடலான Samsung Galaxy S23 Ultra, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை $1199 (தோராயமாக ரூ.98,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனானது பாண்டம் பிளாக், க்ரீம், க்ரீன் மற்றும் லாவெண்டர் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
Galaxy S23 சீரிஸ் விற்பனை எப்போது?
Samsung Galaxy S23 சீரிஸ் பிப்ரவரி 17 முதல் விற்பனைக்கு கிடைக்கு்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்ற தகவல் இன்று (பிப்ரவரி 2) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள அடிப்படை மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 குறித்த தகவலை அறிய இங்கே கிளிக் செய்யவும் Samsung Galaxy S23 விலை


Click it and Unblock the Notifications