காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
சாம்சங் பிரியர்கள் மட்டுமில்லாமல் புது போன் வாங்கும் பலரும் காத்திருந்த தினம் வந்துவிட்டது. சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra போனை அறிமுகம் செய்துள்ளது.
Samsung Galaxy S23 அறிமுகம்
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸை அறிமுகம் செய்துள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 23 தொடரில் Samsung Galaxy S23, Galaxy S23+ மற்றும் Galaxy S23 அல்ட்ரா போன்கள் இடம்பெற்றுள்ளது. Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் அனைத்து போன்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு இருக்கிறது.

Samsung Galaxy S23 இந்திய விற்பனை
Samsung Galaxy S23 தொடரில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த தொடரில் உள்ள போன்களில் கம்மி விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான். இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் விலை தோராயமாக ரூ.65,500 ஆகும். Samsung Galaxy S23 சீரிஸ் ஆனது பிப்ரவரி 17 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது இன்று (பிப்ரவரி 2) அறிவிக்கப்படும்.
ப்ரீமியம் டிஸ்ப்ளே
Samsung Galaxy S23 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது Android 13 அடிப்படையிலான UI 5.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.1 இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது வெளிப்புற பயன்பாட்டையும் மேம்படுத்தி வழங்கும் வகையில் விஷன் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 240Hz டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

உயர்தர கேமரா அம்சங்கள்
Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் ஃபீல்ட் ஆஃப் வியூ ஆதரவு கொண்ட 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
Samsung நிறுவனமானது கேலக்ஸி எஸ்23 மாடல்களில் மேம்பட்ட கேமரா பயன்பாட்டை வழங்கி இருக்கிறது. 8K தர வீடியோவை வினாடிக்கு 30 பிரேம்கள் பதிவு செய்யலாம். முந்தைய மாடல்களை விட ஏணைய மேம்பட்ட அம்சங்கள் இந்த கேலக்ஸி எஸ்23 மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது.
Samsung Knox பாதுகாப்பு மற்றும் Knox Vault
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, Wi-Fi Direct மற்றும் USB Type-C போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 மதிப்பீடு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புது போன் Samsung Knox பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் Knox Vaultக்கான ஆதரவை கொண்டிருக்கிறது.

சாம்சங் Galaxy S23 பேட்டரி ஆயுள் எப்படி?
சாம்சங் Galaxy S23 ஸ்மார்ட்போனில் 3,900mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை சார்ஜ் செய்வதற்கு என 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 168g கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications