பில்கேட்ஸ் காதல் உட்பட ஆச்சர்யமளிக்கும் 10 தகவல்கள்.!
இந்த வீட்டை கட்டிமுடிக்க பில்கேட்ஸ்க்கு 7 ஆண்டுகள் மற்றும் 63மில்லியன் டாலர் பணமும் தேவைப்பட்டது .
பில்கேட்ஸ்க்கு அறிமுகம் தேவைப்படுமா என்ன! உலகின் நம்பர் 1 மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனரான பில்கேடஸ், நீண்ட காலம் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என பட்டத்தையும் தக்கவைத்திருந்தார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான், அமேசான் சி.ஈ.ஓ இவரை முந்தி உலகின் பணக்கார மனிதனாக மாறினார். பில்கேட்ஸ்-ன் 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையை தவிர்த்து, அவருக்கு சொந்தமான 10 ஆச்சர்யமளிக்கும் பொருட்களின் பட்டியலை இங்கு காணலாம்.

123மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு
இந்த வீட்டை கட்டிமுடிக்க பில்கேட்ஸ்க்கு 7 ஆண்டுகள் மற்றும் 63மில்லியன் டாலர் பணமும் தேவைப்பட்டது .
இந்த தொழில்நுட்ப காந்தம், சொத்துவரியாக ஒவ்வொரு ஆண்டும் 1மில்லியன் டாலர் செலுத்துகிறார்.
பல்வேறு அறிக்கைகளின் படி, 2014 வாக்கில் பில்கேட்ஸின் வீட்டின் மதிப்பு 123.54 மில்லியன் டாலர்.

மாறிக்கொண்டு இருக்கும் சுவர் அலங்காரம்
பில்கேட்ஸ் வீட்டின் சுவர்களில் உள்ள சுவர் அலங்காரம், ஒரு பொத்தானை தொடுவதன் மூலம் மாறிக்கொண்டே இருக்கும்.
யார்வேண்டுமானாலும் அவர்களுக்கு விருப்பமான ஓவியங்கள் அல்லது புகைப்படங்கள் சேமிப்புகருவிகளில் இருப்பின், சுவர்களில் சுவர் அலங்காரமாக திரையிடலாம்.

60 அடி நீச்சல்குளம்
பில்கேட்ஸ் வீட்டில் உள்ள 60 அடி நீச்சல்குளம், அதற்கான பிரத்யேக 3900 சதுர அடி கட்டிடத்தில் அமைந்துள்ளது.
இந்த நீச்சல் குளத்தில் நீருக்கடியில் இயங்கும் மியூசிக் சிஸ்டம் உள்ளது.

மிகப்பெரிய ட்ராம்போலின்
மைக்ரோசாப்ட் இணைநிறுவனர் பில்கேட்ஸ் தனது வீட்டில் மிகப்பெரிய ட்ராம்போலின் சொந்தமாக வைத்துள்ளார்.
ட்ராம்போலின் வைக்கப்பட்டுள்ள அறையின் உயரம் சுமார் 20 என்பதால், ட்ராம்போலின் எவ்வளவு பெரியது என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மகத்தான நூலகம்
பில்கேட்ஸ்-ன் வீட்டில் 2100 சதுர அடி அளவிலான நூலகம் கோபுர கூரை மற்றும் இரு இரகசிய புத்தக அலமாரியுடன் அமைந்துள்ளது.
இந்த நூலகத்தில் கோடக்ஸ் லீசெஸ்டர்,1994ம் ஆண்டு பில்கேட்ஸ் 30.8 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்த 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த லியோனார்டோ டா வின்சி புத்தகத்தின் கையெழுத்துபிரதி போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஹோம் தியேட்டர்
பில்கேட்ஸ் வீட்டில் உள்ள நம்பமுடியாத ஓர் ஆச்சர்யம் என்னவெனில், அங்குள்ள பிரத்யோகமாக ஹோம் தியேட்டர்.
சிறப்பம்சம் என்னவெனில், இந்த தியேட்டரில் ஆர்ட் டோகோ ஸ்டைல் மற்றும் தனி பாப்கார்ன் இயந்திரமும் உள்ளது. இந்த தியேட்டரில் 20 விருந்தினர்கள் அமரமுடியும்.

செயற்கை ஓடை மற்றும் கடற்கரை
பில்கேட்ஸ் வீட்டில் உள்ள செயற்கை ஓடை மற்றும் நதி முகத்துவாரத்தில், நன்னீர் மற்றும் கத்ரோட் ட்ரவுட் மீன்கள் உள்ளன.
செயற்கல கடற்கரை பற்றி கூறவேண்டும் என்றால், செயின்ட் லூசியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் படகுகளில் பெரிய அளவில் கொண்டுவரும் மணலால் நிரம்பியுள்ளது.

கலைபடைப்புகளின் தொகுப்பு
மிகப்பெரிய கலைவிரும்பியான பில்கேட்ஸ் வைத்திருக்கும் தனிப்பட்ட கலைபடைப்புகளின் தொகுப்பு மிகவும் பிரபலமானது.
அந்த தொகுப்பில்,36 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய வின்ஸ்லோ ஹோமர்-ன் ' லாஸ்ட் ஆன் தி க்ராண்ட் பேங்க்ஸ்' என பெயரிட்ட ஆயில் பெயிண்ட்களும் அடக்கம்.
அவர் சேகரித்த மற்றொரு கலைப்படைப்பில், 28 மில்லியன் டாலர்விலை கொடுத்து வாங்கிய ஜார்ஜ் பீலோஸ்-ன் 'போலோ க்ரவுட்'ம் உள்ளது.

தனிப்பட்ட விமானம்
பில்கேட்ஸிடம் சொந்தமாக தனிப்பட்ட விமானமும் உள்ளது. இவரிடம் உள்ள பாம்பார்டியர் பிடி-700விமானம், மற்ற உயர்தர கார்பொரேட் விமானங்களான போயிங் 737 பிபிஜெ, கல்ப்ஸ்ட்ரீம் வி மற்றும் ஏர்பஸ் ஏசிஜெ 319 போன்றவற்றுடன் சரிசமமாக போட்டிபோட வல்லது.

காதல் உலகம்
மைக்ரோசாப்ட் நிறுவனரின் கார்களின் மீதான காதல் உலகம் அறிந்ததே.
இவருக்கு சொந்தமாக பல்வேறு நவீன மற்றும் பழம்பெரும் பாரம்பரிய கார்களும் உள்ளன.
1988 போர்சே 959 கூப்பே, போர்சே 911 கார்ரேரா மற்றும் போர்சே 930 போன்ற கார்களும் பில்கேட்ஸின் தொகுப்பில் உள்ளன.


Click it and Unblock the Notifications








