ஜூலை 2018 : பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்.!

By Sharath
|

உங்களுக்காகவே பிரத்தியேகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்கள் உங்களை ஸ்மார்ட்டாக மாற்ற . அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஸ்மார்ட்வாட்சுகளின் விற்பனை அமோகமா இருக்கிறது, இருப்பினும் இந்திய சந்தையில் அவற்றின் விற்பனை இன்னும் மந்தமாகவே உள்ளது. நம்மில் பெரும்பாலோர் ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என்று விரும்பி இருப்போம் ஆனால் வாங்க அவற்றின் விலை நம்மை தடுத்து இருக்கும்,இந்தியாவில் ஸ்மார்ட்வாட்சுகளின் விற்பனை மந்தமாக முக்கிய காரணமே அவற்றின் விலை தான்.

நாங்கள் தேடி தேர்ந்த்தெடுத்த ரூ 10,000-க்கான ஸ்மார்ட் வாட்ச்களின் பட்டியல் உங்களுக்காக. இனி நீங்களும் ஸ்மார்ட் தான்.

1.ஹுமி அமிமிஃபிட் பிப்(Huami Amazfit Bip)

1.ஹுமி அமிமிஃபிட் பிப்(Huami Amazfit Bip)

சியோமி நிறுவனத்தின் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் அதன் கவர்ச்சிகரமான லூக் உங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும்படி வடிவமைக்க பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்று இருப்பது, நம்மை இன்னும் கவர்கிறது. இவ்வாட்ச்சில் 1.28 இன்ச் டிஸ்பிலே கர்வுடு 2.5டி கார்னிங் கொரிலா கிளாஸ்சுடன் வருகிறது. இதன் மிக சிறந்த சிறப்பம்சமாக 40 நாட்கள் தொடர் பேட்டரி லைப்புடன் களமிறங்கியுள்ளது.

இத்துடன் ஜிபிஎஸ்(GPS), பாரோமீட்டர்(barometer), ஜியோமெக்னெட்டிக் சென்சார்(geomagnetic sensor), 3 அச்சு அக்சிலோமீட்டர்(3-axis accelerometer), பிபிஜி இதய துடிப்பு சென்சார்(PPG) வுடன் உங்கள் இதய துடிப்பு, உடற்பயிற்சி, தூக்கம் அனைத்தையும் உங்களுக்கு துல்லியமாக தெரிவிக்கின்றது. இத்துடன் ஸ்மார்ட் வாட்சில் வாட்ஸ்ஆப், முகப்புத்தகம், காலண்டர்,கால் செய்யும் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இணக்கம்: அண்ட்ராய்டு, iOS

ஃப்ளிப்கார்ட் விலை : ₹ 5,499

2.போல்ட் ஹாக் ஸ்மார்ட்வாட்ச்(Boltt Hawk Smartwatch)

2.போல்ட் ஹாக் ஸ்மார்ட்வாட்ச்(Boltt Hawk Smartwatch)

போல்ட் ஹாக் ஸ்மார்ட்வாட்ச் இன்னொரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச், நீங்கள் இதை ரூ10,000 கீழ் வாங்கலாம். ஸ்மார்ட் வாட்சின் தோற்றம் மிகவும் நேர்த்தியான ஒரு பாரம்பரிய கடிகாரம் போல தோற்றம் தருவதுடன், துல்லியமான அட்டவணைக்கு ஒரு டன் செயல்பாட்டை வழங்குகிறது. முதலில், உங்கள் நடை பயிற்சி, தூக்கம் மற்றும் பல நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இது ஐபி68(IP68) தர சான்று பெற்ற வாட்டர் ரெஸிஸ்டண்ட் ஸ்மார்ட் வாட்ச், இனி மழையிலோ அல்லது நீச்சல் குளத்திலோ தயங்காமல் விளையாடலாம் . உங்கள் அழைப்பு மற்றும் செய்தி அறிவிப்புகளை பார்க்க அனுமதிப்பதுடன் நேரடியாக அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. மற்ற அம்சங்களாக, வாடிக்கையாளர்களின் வாட்ச் முகப்புகளை மாற்றும் திறன், திசைகாட்டி, கேமரா மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. பட்ஜெட் விலையில் நீங்கள் வாங்கக்கூடிய அம்சம் நிறைந்த ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்றாகும்.

இணக்கம்: அண்ட்ராய்டு, iOS

அமேசான் விலை : ₹8,999

3.மார்டியன் நோட்டிப்பையர் (Martian Notifier)

3.மார்டியன் நோட்டிப்பையர் (Martian Notifier)

நீங்கள் பாரம்பரியத்தை கடைபிடிப்பவரா, அப்படியானால் இந்த மார்டியன் ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்காக தான். இந்த கை கடிகாரம் பாரம்பரிய அனலாக் டயல் தோற்றத்துடன் வருகிறது, சற்று நன்கு உற்று கவனியுங்கள் முட்களுக்கு இடையே சிறிய நோட்டிபிகேஷன் திரை உள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மற்றும் தூக்கம் போன்ற பல காரியங்களைச் செய்ய உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதற்கும், அழைப்புகளை அனுப்புவதற்கும், என்ன செய்யக்கூடாது என்பதற்கும், மார்டியன் அறிவிப்புகளை உங்கள் தொலைபேசிக்கு அனுப்புகிறது. அறிவிப்பு வரும் போதெல்லாம் மார்டியன் அதிர்வுறுகிறது, நீங்கள் எந்த வகையான அறிவிப்பைப் பெற்றீர்கள் என்பதைக் காண உங்கள் கையை உயர்த்தினால் டிஸ்பிலேயில் பக்கவாட்டாக நகர்த்துவதன் மூலம் உங்கள் முழு செய்திகளையும் படிக்கச் அனுமதிக்கிறது. நீங்கள் உங்கள் அனலாக் கடிகாரத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை என்றால் கண்டிப்பாக மார்ஷியன் நோட்டிப்பையர் உங்களுக்காகத் தான்.

இணக்கம்: அண்ட்ராய்டு, iOS

அமேசான் விலை : ₹9,542

4.நாய்ஸ் இக்னைட் ஸ்மார்ட் வாட்ச்

4.நாய்ஸ் இக்னைட் ஸ்மார்ட் வாட்ச்

நாய்ஸ் இக்னைட் ஸ்மார்ட் வாட்ச் என்பது நுழைவு நிலை ஸ்மார்ட்வாட்ச் ஆகும். நாய்ஸ் இக்னைட் 1.2 அங்குல இ-பேப்பர்(ePaper) கொண்டு கூர்மையான எல்சிடி திரையுடன் எளிதாக உங்கள் அறிவிப்புகளை பார்க்கும் விதம் வந்துள்ளது. இந்த கடிகாரத்தைப் பற்றிய சிறந்த அம்சங்களில் ஒன்றானது வாட்டர் புரூஃப் சேவை, 30 மீட்டர் ஆழம் வரை பாதுகாப்பு அளிப்பதுடன் இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இத்துடன் 40 நாட்கள் பேட்டரி ஆயுள் கொண்ட கடிகாரமாக, செய்திகள் மற்றும் சமூக ஊடக அறிவிப்புகளை பயனர்களுக்கு அறிவிப்பதன் மூலம் இந்த கடிகாரம் நல்ல வேலை செய்கிறது. எனினும், இங்கே உடற்பயிற்சி கண்காணிப்பு போன்ற இதர சேவைகள் இல்லை.

இணக்கம்: அண்ட்ராய்டு, iOS

அமேசான் விலை : ₹4,999

5.வாட்ச்அவுட் வைல்டு பிளாக் பாந்தர்(WatchOut Wild Black Panther)

5.வாட்ச்அவுட் வைல்டு பிளாக் பாந்தர்(WatchOut Wild Black Panther)

இந்த வாட்சின் பெயரே அட்டகாசம் உள்ளது, பிளாக் பாந்தர் ரசிகர்களுக்கு இந்த பெயர் மட்டுமே போதும் என்று கண்ணை மூடி வாங்கிவிடுவார்கள். பெயரோடு மற்றும் இல்லாமல் இதன் செயல்திறனும் பட்ஜெட் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச்சா என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வாட்ச் 1.22 இன்ச் தொடுதிரையுடன் ஐபிஎஸ்(IPS) பேனலுடன் வருகிறது. உங்கள் இதய துடிப்பை துல்லியமாக கண்காணிப்பதுடன் உங்கள் நடை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் சேவையின் மூலம் உங்கள் மொபைலின் கால்கள் மற்றும் கேமரா-வுடன் இனைந்து செயல்படுகிறது.

இணக்கம்: அண்ட்ராய்டு, iOS

பிளிப்கார்ட் விலை : ₹6,299

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Smartwatches Under 10000 INR (July 2018) : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X