Home
Mobile

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் செயல்படும் செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் மனித மூளை பாதிக்கப்பட்டுவிடும். இது சில நேரங்களில் நினைவாற்றலை முடக்கிவிடும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது யோசிக்கும் திறனையும் குறைத்துவிடுமாம்!

ஏசி.நீல்சன் என்பரால் 46 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வு இது. இதன் முடிவுகள் தான் மேலே சொன்னவை. உலகின் மொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 40 மில்லியனுக்கும் மேல் உள்ளது. இதை பயன்படுத்துபவர்களில் 25 வயதிற்கும் குறைவானவர்களே அதிகம். ஆய்வின் முழு விவரங்கள் கீழே!

செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா? ஆம் என்றால் சிந்திக்கவேண்டிய தருணமிது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி இளைய சமுதாயத்தினரை சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழிக்க வைக்கிறது. இதனால் மனிதனின் சிந்திக்கும் திறனானது குறைந்துகொண்டே இருக்கும். மூளை பகுதியையும் இம்மாதிரி செயல்கள் பாதிக்கும் என வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நினைவாற்றல் தன்மையானது நாளுக்குநாள் குறைகிறது. நமது மூளையில் சாதாரணமாக பதிந்திருக்கும், முக்கியமான தொலைபேசி எண்கள், முக்கியமான நாட்கள், நண்பர்களின் பிறந்த தினங்கள் போன்றவையெல்லாம் தற்பொழுது மறுக்கப்படுகிறது.

முன்பெல்லாம் 10க்கும் மேலான வெவ்வேறு தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருந்த நம்மால் தற்பொழுது நம் எண் தவிர வேறு நினைவில் இருப்பதில்லை. விகிதம் குறைந்திருக்கிறதாம்.

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

இந்த குறைபாடானது பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கே அதிகஅளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெரியவர்கள் அதிக நேரம் செல்போனில் பேசினால் சிந்திக்கும் திறன் குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

நினைவாற்றலை முடக்கும் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் செல்போன்கள்...

கூகுள் போன்ற தேடுபொறிகளும் மனித மூளையை செயல்படாமல் செய்வதில் குறிப்பிட்ட பங்காற்றுகிறதாம். இந்நிலை தொடர்ந்தால் தனி மனிதனால் எதுவும் சிந்திக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது இந்த ஆய்வு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X